தேடு

சனி, 13 ஏப்ரல், 2013

சீனாவின் அடக்குமுறை

திபெத்தை சீனா கைப்பற்றியது: தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்பெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால், அந்த நாட்டின் அதிபராக இருந்த தலாய் லாமா இந்தியாவுக்கு ஓடிவந்தார். அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத், 1959-ம் ஆண்டுவரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது. புத்த மதத்தலைவரான தலாய் லாமா, நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார். 

(ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமா வாகத் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். இந்த கிளர்ச்சி, பிறகு புரட்சியாக மாறியது. புரட்சியை அடக்கும்படி ராணுவத்துக்கு சீன அரசாங்கம் உத்தர விட்டது. ராணுவத்தின் அடக்குமுறையை தாங்க முடியாமல், திபெத்திய மக்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறத் தொடங்கினார்கள். 

தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தற்போதைய தலாய் லாமா, 1935-ம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14-வது தலாய் லாமா.) திபெத் தனி நாடு என்றாலும், சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கி வந்தது. இந்த நிலையில் 1959-ம் ஆண்டில் திபெத்தை கைப்பற்றிக் கொள்ள சீன அரசாங்கம் முடிவு செய்தது. 

சீன ராணுவம் திபெத்துக்குள் நுழைந்தது. திபெத்தின் தெற்கு எல்லையில் நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளுக்கு திபெத்தியர்கள் ஓடுவார்கள் என்று சீனா கருதியது. எனவே அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று நேபாளம், பூடான் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் நாட்டை விட்டு ஓடும் திபெத்தியர்களை சுட்டுக் கொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது. 

சீனா ஆக்கிரமிப்பை தொடர்ந்து தலாய் லாமா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. அவரைப் பற்றி பல்வேறு யூகங்களுடன் செய்திகள் வெளிவந்தன. தலாய் லாமா ஒரு மலையில் இருந்து விழுந்து விட்டார் என்றும், இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியானது. 

அதே நேரத்தில் புரட்சிக்காரர்களுடன் தலாய் லாமா தப்பி ஓடிவிட்டார் என்றும், அவர் திபெத்தை விட்டு வெளிநாட்டுக்கு போய் இருக்க முடியாது என்றும் மற்றொரு தகவல் கூறியது. தலாய் லாமா திபெத்தில் உள்ள "லோகா" என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு இருப்பதாக சீன செய்தி நிறுவனம் அறிவித்தது. 

தலாய் லாமா எங்கிருந்தாலும் பிடித்து விடும்படி சீன படைகளுக்கு சீன அரசு உத்தரவு பிறப்பித்தது. தலாய் லாமாவுக்கு பதிலாக "பஞ்சன் லாமா" என்பவரை திபெத்தின் புதிய நிர்வாகியாக சீன அரசாங்கம் நியமித்தது. இவர் தலாய் லாமாவுக்கு எதிரானவர். சீனாவின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்தவர். திபெத்தில் ஏற்பட்டுள்ள ரத்த புரட்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள "லாமா"க்கள் கேட்டுக்கொண்டார்கள். 

அமெரிக்க தலைநகரில் ஊர்வலம் நடத்தி கோஷம் போட்டார்கள். சீன அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. "திபெத்தில் நடந்த புரட்சி இப்போது முழுவதுமாக அடக்கப்பட்டு விட்டது. 4 ஆயிரம் பேர் கைதிகளாக பிடிபட்டுள்ளனர். ஏராளமான போர் ஆயுதங்கள், துப்பாக் கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன" என்று அறிவித்தது. திபெத் நிலைமை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. 

இந்த விவாதத்தின் போது ஒரு எம்.பி. பேசுகையில், "தலாய் லாமா இந்தியா வந்தால் அவருக்கு அடைக்கலம் கொடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு பிரதமர் நேரு, "அப்பொழுது இருக்கும் சூழ்நிலைப்படி நடந்து கொள்வோம்" என்று பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"சீனாவுடன் நட்புடன் இருக்க இந்தியா விரும்புகிறது. எனினும், திபெத் நாட்டில் நடைபெறும் சம்பவங்களை "வெளிநாட்டு விவகாரம்" என்று தள்ளி விடுவதற்கு இல்லை. திபெத் சுதந்திரம் அடைவதை இந்தியா ஆதரிக்கும். இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறு." 

இவ்வாறு நேரு கூறினார். 

ஜேம்ஸ் கார்பீல்டு/JAMES A.GARFIELD


அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் கார்பீல்டு என்பவர் தனது காலத்தில் ஒரு கையால் கிரேக்க மொழியும்,மற்றொரு கையால் லத்தின் மொழியிலும் எழுதுவார்.

நிஜமாவே ரொம்ப கஷ்டம்தாங்க .. 

மனித உடலுக்குள் ஓர் ஒர்க்ஷாப்/HUMAN MACHINE

 நம்மையறியாமல் நமது உடலில் 24 மணி நேரத்தில் பல நிகழ்சிகள் நடைபெறுகின்றன.
  • நமது இதயம் 1,03,689 தடவைகள் துடுக்கின்றன.
  • ரத்தம் உடலினுள் 16,80,00,000 மைல்கள் சுற்றுகிறது.
  • 23,040 முறை நாம் சுவாசிக்கிறோம்.
  • 438 கன அடி காற்றை உள்ளே நாம் இழுத்து கொள்கிறோம்.
  • 8 1/4 பவுண்டு எடையை சராசரி உணவாக சாப்பிடுகிறோம்.
  • தேவையற்றவைகளையும் சேர்த்து 4,800 சொற்கள் பேசுகிறோம்.
  • 750 முறை தசைகள் அசைக்கிறோம்.
  • நமது நகம் 0.000048 அங்குலம் வளர்கிறது.
ம்ம்ம் நம்ம உடம்பு நிஜமாவே மேஷின்தாங்க என்னா சொல்றிங்க.....

தும்மல் /THUMMAL



அடைப்பட்டிருக்கும் மூக்கினாலும், மூக்கு துவாரத்தில்  தூசுகள் நிறைந்திருக்கும்போதும் சளி படலத்தின் மீது உள்ள துகள்கள் உருத்தலாலும் தும்மல் ஏற்படுகிறது.  மூச்சி பையில் காற்றழுத்தம் அதிகமாகி மூச்சி வாயின் மூலம் வெளியேறுகிறது. நாம் தும்மும் போது வெளியேறும் காற்றின் வேகம் 320 கி.மீ. ஆகும். ஒரு முறை தும்மல் வரும்போது 4000 தூசு துகள்கள் வெளியேறுகிறது. இதுவே நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. அப்பாடா  இனிமேல் தும்மும் போது சந்தோசமா தும்முவோம்.!

கடல் செல்வம்/KADAL SELVAM

 உலகில் வாழும் அனைத்து கடல்வாழ் உயிரினகளில் 36 கோடி வகை பிராணிகள் வாழ்கின்றன. இந்த மகா சமுத்திரத்தில் பிடிக்கும் மீனின் மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 25 லட்சம் டன். உலகில் உள்ள அனைத்துப் பெரிய கடல்களிலும் 65 லட்சம் டன் கலந்துள்ளதாம். நிக்கல், செம்பு, பாஸ்பேட்டு போன்ற உலோகங்களின் மதிப்பு கோடிக்கணக்கான டன்கள்.

பூமியின் எடை /POOMIYIN EDAI


பூமியின் எடையானது 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் 23 மணி 56 நிமிடம் 4.09 வினாடி.
சூரியனை சுற்றிவர ஆகும் காலம் 365 நாட்கள் 5 மணி 45.5 வினாடி.

கிழமையும் விளக்கமும் / kilamaiyum vilakkamum



SUNDAY  = கதிரவனுக்கு முதன்மை இடமளித்தால் SUNDAY என்றாயிட்டு.

MONDAY = சந்திரனின் நாளாக இரண்டாம் நாள் MONDAY

TUESDAY= ஸ்காண்டி நேவியர்களின் கடவுளாகிய TIW  என்பதே Tuesday ஆகும்.

WEDNESDAY= ஸ்காண்டி நேவியர்களின் அரசன் Wodin என்பதே WEDNESDAY.

THURSDAY=   இடி கடவுளின் (TOR) பெயரையே THURSDAY ஆகும்.

FRIDAY=      நேவியர்களின் அரசி FRIGG அவர்களின் பெயர்ப்படி  வந்ததாகும்.

SATURDAY=  ரோமானியர்களின் கடவுள் (SATURN) பெயரையே இறுதிநாளுக்கு வைத்தனர்.

தமிழகத்தின் கல்வி நிலையங்கள் /tamilgathin kalvi nilaiyangal

பள்ளிகள்   -43,009

மருதுவக்கல்லூரிகல்   -13

பொறியியல் கல்லூரிகல்   -37

கல்லூரிகல்   -389

பல்கலைக் கழகங்கள்   -19