தேடு

சிரிப் 'பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரிப் 'பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஏப்ரல், 2013

ha ha ha....



நிருபர் : நீங்க எழுதின நாவல் ரொம்ப Tasteஆ இருக்கே, ஏங்க ?
எழுத்தாளர் : கிச்சன்லே நான் சமையல் பண்ணும்போது எழுதினது ஆச்சே
ஆசிரியர் : உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?
மாணவன் : எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்.........
வேலு : அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..?
பாக்கி : டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்
ரமனன் : டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர் : இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
டாக்டர் : என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
நண்பர் : திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?
அதிகாரி : நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.
ரானி : டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..
டாக்டர் : எப்படி சொல்றீங்க?
ரானி : சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..
வேனி : குடும்பத்துக்கு விளக்கேற்றி வைக்கப் பொண்ணு வேணும்னு சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு..
ரானி : ஏன்?
வேனி : என் மருமகள் விளக்கேத்தறதைத் தவிற வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா..
பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
வேலு : நிஜமாவா?
பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா



சிரிப் 'பூ,




பாக்கி : 22 - ம் நம்பர் பஸ் எங்கே வரும்?
வேலு : ரோட்ல தான்!

நண்பர் 1 : என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?
நண்பர் 2 : நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..

ரமனன் : பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?
முராரி : மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை.

முட்டாள் 1 : என்னங்க... செருப்பு காலை கடிக்குது
முட்டாள் 2 : அப்ப மாலைல போட்டுக்கங்க

ரமனன் : தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
பாக்கி : இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.

ஒருவர் : சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?
அதிகாரி : டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே

ரானி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
வேனி : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே

வேனி : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?
ரானி : எதுக்கு?
வேனி : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு

சிரிப் 'பூ



முட்டாள் 1 : சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...
முட்டாள் 2 : அதுக்கென்ன இப்போ..
முட்டாள் 1 : ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.
வக்கீல் : கொலை எங்கே நடந்தது?
சாட்சி : திருப்பதியிலே சார்.
வக்கீல் : இப்படி மொட்டையா சொன்னா எப்படி?
கோபு : அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..
பாபு : ஏன்...
கோபு : அதான் சீப்பா கிடைக்குதாம்
பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?
ரமேஷ் : எத்தனை பெரிய ஆபத்து வந்தாலும் யானை, குதிரை எல்லாம் கத்தாது.
சுரேஷ் : ஏன்?
ரமேஷ் : யானை பிளிறும்! குதிரை கனைக்குமே!
ஒருவர் : திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே என்ன ஆச்சி ?
மற்றொருவர் : கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க
ரமனன் : பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா..?
பாப்பா : இல்ல, எனக்கு எடுத்தது..என்ன..,
பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.

சிரிப் 'பூ


ரமனன் : சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?
சர்வர் : ஏன் அக்கறையா கேட்கறீங்க ?
ரமனன் : எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.
பாபு : டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?
டாக்டர் : அப்போ...., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?
அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?
புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!
நீதிபதி : "ஏம்ப்பா ரெண்டு காலும் நொண்டியா இருக்கும்போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கயே இன்னும் கை காலல்லாம் நல்லா இருந்தா என்ன செஞ்சிருப்ப?"
திருடன் : "இப்டி அனாவசியமா மாட்டிட்டுருக்க மாட்டேங்க."
வக்கீல் : மை லார்ட் . . . என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர் நேர்மையானவர் யாரிடமும் கொடூரமாக நடந்து கொள்வதை அவர் வெறுப்பவர் எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில் என் கட்சிக்காரர் சிறந்தவர்.
கட்சிக்காரர் : (சத்தமாக) யோவ் வக்கீல் . . . என்ன விளையாடறியா? காசு வாங்கிக்கிட்டு என்னைப் பத்தி சொல்லுய்யான்னா . . . வேற யாரைப் பத்தியோ சொல்லிக்கிட்டு இருக்கியே . . . தொலைச்சிடுவேன் தொலைச்சி . . .
கோபு : டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.
பாபு : அப்புறம் ?
கோபு : அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்
நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.
ஒருவர் : உங்களுடன் சீட்டுக்குச் சேரும் பொடியன் அவ்வளவு நல்லவன் இல்லை. இடையிலே முறிச்சுக்கொண்டு ஊர் மாறி, காலை வாரி விடப் போறான் கவனம்.
மற்றவர் : நானே முதல் சீட்டை சேர்த்துக் கொண்டு நாடு மாறுவதற்கு எல்லா ஆயத்தங்களும் செய்து விட்டேன். நீங்கள் வேறு அது இது என்று சொல்லிக் கொண்டு…ஒருவர் ? ? ?

சிரிப் 'பூ



ரமனன் : எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப்போயிடுச்சே அதுக்கப்புறம் என்ன மாமி ஆச்சு?
மாமி : இதுக்கு மேல விவரங்கள் வேணும்னா மாமி.காம் ஓபன் பண்ணி பார்த்துக்கோடீம்மா.
ரமனன் : "வேலு பறவையிலேயே எந்தப் பறவை நல்லாப் பாடும் சொல்லு?"
வேலு : "பரவை முனியம்மா, சார்"
அமைச்சர் : அரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு இருந்தனர்
அரசர் : ராஜ ரகசியத்தை வெளியிட்ட இவர்களை பாசறையில் அடை
ஒருவர் : மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?
மற்றொருவர் : அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
ஒருவர் : போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார்
தொண்டர் 1 : தலைவர் எங்க நிக்கவச்சாலும் நான் நிப்பேன்னு பெருமையா பேசினது தப்பா போச்சு.
தொண்டர் 2 : ஏன் என்னாச்சு?
தொண்டர் 1 : வீட்டுக்கு வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்டாரு.
நண்பர் 1 : அந்த அம்பயர் ஏன் நடுவில் நிக்காம ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?
நண்பர் 2 : அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாங்களாம்.


சிரிப் 'பூ,



ஒருவர் : சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
மற்றொருவர் : எப்படிச் சொல்றீங்க ?
ஒருவர் : ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
திருடன் : என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.
நீதிபதி : எப்படி ?
திருடன் : ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.
நண்பர் 1 : தீபாவளிக்கு ரிலீசாகற படங்கறதால இந்த மாதிரி சீன் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.
நண்பர் 2 : என்ன சீன்?
நண்பர் 1 : ஹீரோயின் தொப்புள்ல சங்குச் சக்கரம் விடறமாதிரி!
வேலு : "விசிடி கடையெல்லாம் மூடினதால நம்ம டைரக்டர் கை ஒடிஞ்ச மாதிரி ஆயிட்டார்"
ரமனன் : "ஏன் இவங்கதானே திருட்டு வி.சி.டி.ய ஒழிக்கனும்னு குதிச்சாங்க?"
வேலு : "தமிழ் சிடிக்கள மட்டும்தான் சொன்னாங்க இங்கிலீஷையும் ஒழிச்சுட்டா எதப்பாத்து இவர் படம் எடுக்க முடியும்"
கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?
நண்பர் 1 : நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?
நண்பர் 2 : சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்.
ரானி : தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
வேனி : தெரியலையே .. .. என்னது ?
ரானி : தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
நோயாளியின் மனைவி : எப்படி சொல்றீங்க?
டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!

ஹா ஹா ஹா...



மனநல ஆசிரியர் : "தம்பி அங்க பாரு பசங்களெல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடறாங்க நீ மட்டும் இப்டி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு."
மாணவன் : "அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்."

நண்பர் 1 : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
நண்பர் 2 : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்

கோபு : ஓட்டப்பந்தயத்துல தங்க மெடல் வாங்கினா "ஊக்க மருந்து"ன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க. சரி கடைசில வந்தவங்களையும் ஏன் செக் பண்றாங்க?
பாபு : இவங்க ஏதாவது "தூக்க மருந்து" சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.

நண்பர் 1 : பரவாயில்லையே நாங்க எவ்வளவு அடிச்சும் உங்க பையனுக்கு "ழ" வரவே இல்லை. இன்னிக்கு கரெக்டா சொல்றானே. என்ன செஞ்சீங்க?
நண்பர் 2 : நீங்க எவ்வளவு அடிச்சும் வராத "ழ" அவன் தண்ணியடிச்சதும் தானா வந்துடுச்சு.

ஒருவர் : லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமில்ல?
மற்றொருவர் : டிரிங்க்ஸ் குடிக்கறப்ப ஜூஸ் சிந்திடுச்சி சார்!

கணவன் : "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"
மனைவி : "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."

மகன் : அப்பா பைத்தியம்னா என்னப்பா?
தந்தை : சம்பந்தா சம்பந்தமில்லாம நீளமா எதையாவது உளறிகிட்டே இருப்பாங்க பேசறது எதுவுமே புரியாது என்ன புரிஞ்சுதா?
மகன் : சுத்தமா புரியலையேப்பா . . .

ஆசிரியர் : துரியோதனன் தன்னோட உயிர தொடைலதான் வச்சுண்டுருந்தானாம்.
மாணவன் : இதென்ன சார் பெரிய விஷயம் நம்ம கிளா ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.

"தம்பி நீ ரொம்ப லேட்


பரீட்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு மாணவன் பரீட்சை ஹாலுக்கு அரை மணி நேரம் லேட்டாக வந்து சேர்ந்தான்.
"தம்பி நீ ரொம்ப லேட். இன்னும் இரண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுடனும்" என்றார் ஆசிரியர். மாணவன் ஒத்துக்கொண்டான்.
ஆசிரியர் சொன்ன நேரம் வந்தது.
ஆனால் அந்த மாணவன் எழுதிக்கொண்டே இருந்தான். "தம்பி டைம் ஆயிடுச்சு. இனிமே நீ பேப்பர் குடுத்தா வாங்க மாட்டேன்" என்றார் ஆசிரியர்.
மாணவன் எரிச்சலாகி பேப்பரைத் தூக்கி வீசி
"போங்கய்யா நீங்களும் உங்க எக்ஸாமும்!" என்று கத்தினான்.
"டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே! ப்ரின்சிபால் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்" என்றார் ஆசிரியர்.
"நான் யார் தெரியுமா?" என்றான் மாணவன்.
"நீ யாரா இருந்தா எனக்கென்ன?" என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.
"நான் யார்னு தெரியாது உங்களுக்கு?" என்றான் மாணவன் மீண்டும்.
"தெரியாது!!!" என்று கத்தினார் ஆசிரியர்.
"அப்ப நல்லதாப் போச்சு!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்.


ஒரு முட்டாள் பணக்காரர்



ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார் 

(அரசியல்வாதிகள்)


தொண்டர் : தலைவரே... நாம ரேஷன் அரிசி பதுக்கி வெச்சிருக்கிறது எப்படியோ தெரிஞ்சுபோய் ரெய்டுபண்ண வந்திருக்காங்க.. இப்ப என்ன பண்றது?
தலைவர் : யோவ்.. எல்லாம் எடைக்கு எடை தொண்டர்கள் கொடுத்ததுன்னு சொல்லுய்யா..
(மேடையில் ஒரு அரசியல்வாதி)
தலைவர் : நீலக்கலரில் மண்ணெண்ணெய் வழங்குவது போல், ரேஷன் அரிசியையும் நீல கலர் கலந்து வழங்கினால், ஓரளவு அரிசிக் கடத்தலைத் தடுக்கலாமே.. அரசு யோசிக்குமா..?
ரேஷன் கடையில்
ஒருவர் : என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?
ரேஷன் கடைகாரர் : பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..?

இரண்டு துப்பறியும் நிபுணர்கள்

இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள். ராத்திரி அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார்.
சீனியர் : பையா .. .. வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ?
கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார்
ஜூனியர் : பாஸ் வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ? அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம் நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச் சொல்வேன் .. .. .
ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக,
சீனியர் : முட்டாளே .. நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. .. அது உன் மரமண்டைக்குப் புரியலியா .. .. ? என்று சீறினார் சீனியர்.

ஞாயிறு, 31 மார்ச், 2013

முட்டாள் பணக்காரர்

ஒரு ஊரில் முட்டாள் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.

வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அதனால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக்காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார் 

சிரிப்பு...

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேஇரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.                                                                                            இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.                                                                                                          லே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.                                                                                                    ல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.                                                                                                   கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.