தேடு

வரலாற்று சுவடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாற்று சுவடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜூலை, 2015

புத்தர் (கி.மு.563-கி.மு.483)



Buddhaஇளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.

கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.

வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் " அறவொளி பெற்ற " ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின. 

புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் " நான்கு உயர் உண்மைகள்" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (" அணைதல் அல்லது அவிதல்" எனப் பொருள்படும்) " நிர்வாணம்" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் " எட்டு வகைப் பாதை" எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை. 

கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது. 

இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது. 

உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன. 

கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸீம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸீக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது

ஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 - கி.மு. 212)

Archimedes
பண்டைய உலகின் தலைசிறந்த கணித மேதையாகவும் விஞ்ஞானியாகவும் போற்றப்படுபவர். ஆர்க்கிமிடீஸ் ஆவார். நெம்புகோலின் தத்துவத்தையும் வீத எடைமான (specific Gravity) கோட்பாட்டையும் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ் தான் என்பர். எனினும், உண்மையில் ஆர்க்கிமிடீசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெம்புகோல் அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துரைத்தவர் ஆர்க்கமிடீஸ் தான் என்று தெரிகிறது. ஆனால், ஆர்க்கிமிடீசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே, எகிப்தியப் பொறியியல் வல்லுநர்கள் நெம்புகோல்களைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதே போன்று, ஒரு பொருளின் மொத்த எடைக்கு மாறான அப்பொருளின் அடர்த்தி (கன அளவுடன் எடை மானத்துக்குள்ள விகிதம்) பற்றிய கோட்பாடு ஆர்க்கிமிடீசுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது. ஆர்க்கிமிடீசும், மணி முடியும் பற்றி வழங்கும் புகழ்பெற்ற கதை ("கண்டுபிடித்து விட்டேன்" என்று கூவிக்கொண்டே ஆர்க்கிமிடிஸ் குளிக்கும் தொட்டியிலிருந்து குதித்துத் தெருக்களில் ஆடையின்றி ஓடியதாக இக்கதை முடிகிறது). ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் கோட்பாடும், ஒரு புதிய கோட்பாடு அன்று. ஏற்கெனவே நிலவிய ஒரு கொள்கையை, அவர் குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண வெற்றிகரமாகக் கையாண்டார்.
கணித வல்லுநர் என்ற முறையில் ஆர்க்கிமிடீஸ் தலை சிறந்தவராக விளங்கினார் என்பதில் ஐயமில்லை. முழுமைத் தொகையீட்டுக் கலன கணிதத்தை (Integral Calculus) ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு 8 நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆர்க்கிமிடிஸ் அக்கணிதத்திற்கு மிக அருகில் நெருங்கி விட்டார் எனலாம். ஆனால், தீவினைப் பயனாக அவருடைய காலத்தில் வசதியான கணிதக் குறிமான முறை (Mathematical Notation) இல்லாதிருந்தது. அதுபோலவே, அவருக்கு அடுத்து வந்த கணித அறிஞர்களில் எவரும் அவரைப் போன்று முதல்தரக் கணித மேதையாக விளங்கவில்லை. அதன் விளைவாக ஆர்க்கிமிடீசின் அற்புதமான கணித நுண்ணறிவுத் திறனுக்கு அதற்குரிய நற்பலன் கிடைக்காமற் போயிற்று. எனவே. ஆர்க்கிமிடீசின் திறமை தன்னேரிலாததாக இருந்தபோதிலும், உள்ளபடிக்கு அவருடைய செல்வாக்கு, இந்நூறு பேரில் அவரைச் சேர்க்கும் அளவுக்கு அதிகமாக இருக்கவில்லை.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922)


Alexander Graham Bell
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.
அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)
பெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு "வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய "அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.
பெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர். நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.
தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதில்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.
தொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது எனக் கருதுகிறேன்.
தொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, அலெக்சாண்டர் கிரகாம்பெல், மார்கோனியைவிட மிகக் குறைந்த அளவுதான் செல்வாக்கில் குறைந்தவர் என நான் கருதுகிறேன்.

மகா அலெக்சாந்தர் (கி.மு.356-323)


Alexander of Macedon
பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.
கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.
மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.
அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது. அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக, அலெக்சாந்தர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாந்தர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாந்தரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது.
அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார். அதன் பின்பு, அலெக்சாந்தர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோதே, அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாந்தருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.
டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாந்தர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார். இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.
ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாந்தர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாந்தர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.
இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார். ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாந்தர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.
பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாந்தர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாந்தர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.
மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை.
அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.
அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உணிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம். ஆனால், அலெக்சாந்தரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை.
அலெக்சாந்தர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள்கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்க அவர் வேட்கை கொண்டார். மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகத் திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாந்தர், திறமை அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால், ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை.
அதே சமயத்தில், அலெக்சாந்தர் ஒரு தலைசிறந்த அறிவாளியாகவும் விளங்கினார். பண்டைய உலகின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமாகிய அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி பயின்றார். ஹோமரின் கவிதையைப் பொன்னேபோல் போற்றினார். கிரேக்கர் அல்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அவர் உணர்ந்து கொண்டதும் அவர் தம் காலத்திய பெரும்பாலான கிரேக்கச் சிந்தனையாளர்களைவிட அதிகப் பரந்த நோக்குடன் நடந்து கொண்டார். ஆனால் மற்ற வழிகளில் அவர் மிகுந்த குறுகிய நோக்குடன் நடந்தது வியப்பளிக்கிறது. போர்க்களத்தில் அவர் அடிக்கடி அபாயங்களை ஏற்றார் என்ற போதிலும் அவர் தமக்கு ஒரு வாரிசை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் இருந்து விட்டார். அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்குப் பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைந்து சிதறுண்டு போனதற்குப் பெரிதும் காரணமாகும்.
அலெக்சாந்தர் கவர்ச்சியான தோற்றமுடையவராக இருந்தார். அவர் மிகுந்த சமரச மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். தாம் தோற்கடித்த பகைவர்களிடம் கருணை காட்டினார். அதேசமயம், அவர் ஆணவம் கொண்டவராகவும், எளிதில் ஆத்திரங்கொள்ளும் முரட்டுக் குணமுடையவராகவும் இருந்தார். ஒரு சமயம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தம் உயிரை ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் என்ற ஆரூயிர் நண்பனையே இவர் கொன்று விட்டார்.
நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரைப் போன்று, அலெக்சாந்தர் தமது தலைமுறையினர் மீதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது குறுகிய காலச் செல்வாக்கு அவர்களுடையதைவிடக் குறைவாகவே இருந்தது. அவர் காலத்தில் பயணம் மற்றும் செய்திப் போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருந்தமையால், உலகின் மிகக் குறுகிய பகுதிக்கே அவருடைய செல்வாக்குச் சென்றது.
அலெக்சாந்தரின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளில் மிக முக்கியமானது, கிரேக்க நாகரிகத்தையும், மத்திய கிழக்கு நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே தொடர்பு கொள்ள செய்து, அதன் வாயிலாக இரு பண்பாடுகளுக்கும் வளமூட்டியதாகும். அலெக்சாந்தரின் ஆயுட்காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்பு, உடனடியாகவும், ஈரான், மெசொப்பொட் டோமியா, சிரியா, ஜூடியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிரேக்கப் பண்பாடு விரைவாகப் பரவியது. அலெக்சாந்தருக்கு முன்பு, இந்த மண்டலங்களில் கிரேக்கப் பண்பாடு மிகவும் மெதுவாகவே நுழைந்து வந்தது. மேலும், கிரேக்கப் பண்பாட்டை அது எப்போதும் எட்டாதிருந்த இந்தியாவில், மத்திய ஆசியாவிலுங்கூட அலெக்சாந்தர் பரப்பினார். பண்பாட்டுச் செல்வாக்கு என்பத எந்தவகையிலும் ஒரு வழிப்பாதை அன்று. அலெக்சாந்தர் வாழ்ந்த காலத்துக்கு அடுத்துப் பிந்திய நூற்றாண்டுகளில், கீழை நாடுகளின் கொள்கைகள் முக்கியமாகச் சமயக் கொள்களைகள் கிரேக்க உலகில் பரவின. பெரும்பாலும் கிரேக்க அம்சங்களும், வலுவான கீழை நாட்டுச் செல்வாக்குகளும் இணைந்த இந்தக் கலப்புப் பண்பாடுதான் இறுதியில் ரோமாபுரியைப் பாதித்தது.
அலெக்சாந்தர் தமது ஆட்சிக் காலத்தின்போது, இருபதுக்கும் அதிகமான புதிய நகரங்களை நிறுவினார். இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவாகும். இந்த நகரம் விரைவிலேயே உலகின் முன்னணி நகரங்களுள் ஒன்றாகவும், தலைசிறந்த பண்பாட்டுக் கல்வி மையமாகவும் முன்னேற்றமடைந்தது. ஆஃப் கானிஸ்தானிலுள்ள ஹீராத், கந்தஹார் போன்ற வேறு சில நகரங்களும் முக்கியமான நகரங்களாக உருவாகின.
ஒட்டுமொத்தமான செல்வாக்கில் அலெக்சாந்தர், நெப்போலியன், இட்லர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தோன்றுகிறது. அலெக்சாந்தரின் குறுகியச் செல்வாக்கு, மற்ற இவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கும், அலெக்சாந்தரின் செல்வாக்கைவிட மிகக் குறைந்த காலமே நீடித்தது. அந்தக் காரணத்துக்காகவே, அலெக்சாந்தர், மற்ற இருவருக்கும் சற்று முன்னதாக இடம் பெற்றிருக்கிறார்.

அசோகர் (கி.மு. 300-கி.மு.232)

Ashoka
இந்திய வரலாற்றில் மிகப் பெரும் புகழ் வாய்ந்த அரசராக விளங்கியவர் அசோகர். இவர் மௌரிய மன்னர் மரபில் மூன்றாவது அரசர். மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் பேரன். சந்திரகுப்தர் இந்திய இராணுவத் தலைவராக விளங்கினார். அவா மகா அலெக்சாந்தரின் இந்தியப் படை எடுப்பிற்குப் பிறகு, வட இநதியாவின் பெரும் பகுதியை வென்று அதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே ஒரு பெரும் பேரரசை முதன் முதலில் நிறுவினார்.
அசோகர் பிறந்த ஆண்டு தெரியவில்லை. பெரும்பாலும் கி.மு.300 ஆண்டு வாக்கில் அவர் பிறந்திருக்கலாம். கி.மு.273 ஆம் ஆண்டில் அசோகர் அரியணை ஏறினார். முதலில் தன் பாட்டனாரின் அடியொற்றி தம் ஆட்சி எல்லைகளை இராணுவ நடவடிக்கை மூலம் விரிவுபடுத்த விழைந்தார். அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த கலிங்க நாட்டின் (இன்றைய ஒரிசா மாநிலம்) மீது போர் தொடுத்து வெற்றி கண்டார். ஆனால் தமது வெற்றியின் பின்னணியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணித் தாங்கொணாணுத் துயருற்றார். கலிங்கப் போரில் ஒரு இலட்சம் பேர் இறந்தனர். அதற்கும் அதிகமானோர் காயமுற்றனர். இதனால், அதிர்ச்சியும் கடுங்கழுவிரக்கமும் கொண்ட அசோகர் இந்தியா முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற தம் எண்ணத்தைக் கைவிட்டார். மாறாக, எல்லா வகை ஆக்கிரமிப்பிப் போர்களையும் அறவே ஒழித்துவிட உறுதிபூண்டார். அவர் புத்த சமயத்தைத் தமது சமயக் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். வாய்மை. கருணை. அகிம்சை ஆகிய அறநெறிகளைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றார்.
அசோகர் தம் சொந்த வாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால் உண்ணாமையைப் பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர் செயற்படுத்தியது மிக முக்கியமானதாகும். அவர் மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும் நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீ‘படுத்தினார்; சாலைகளை அமைத்தார்; நீ‘ப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும், நட்புறவை ஊக்குவிக்கவும், "தருமாதிகாரிகள்" என்ற சிறப்பு அரசு அலுவலர்களை நியமித்தார். அவரது ஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால் அசோகர் குறிப்பாகப் புத்த சமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால் புத்த சமயம் மக்ளிடைய அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்த சமயப் பிரச்சாரகர்களைப் பல அயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கை சென்ற குழு பெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.
அசோகர் தமது நீண்ட ஆட்சிக் காலத்தின்போது, தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும பாறைகளிலும், தூபிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்த நினைவுச் சின்னங்களில் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச் சின்னங்கள் விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவை அசோகப் பேரரசின் ஆட்சிப் பரப்பின் அளவை அறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச் சான்றுகளாகும். இந்தத் தூபிகள் அவர் காலத்திய சிறந்த கலை வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.
அசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது. அதன் பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப் பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு குறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவா இறக்கும்போது இந்தியா முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப் பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாக வளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.

அடால்ஃப் ஹிட்லர் (1889-1945)


இந்த நூலில் வேண்டா வெறுப்புடன்தான் அடால்ஃப் ஹிட்லரைச் சேர்த்தேன் என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு விளைவிப்பதாகவே இருந்தது. சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ள ஹிட்லரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எனினும், மிகப் பெருமளவு எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஹிட்லர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது.
ஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்ற நகரில் 1889 ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராக முயன்று தோல்வி கண்டார். இந்த இளமைப் பருவத்தில் தான் எப்போதோ இவர் ஒரு தீவிர ஜெர்மன் தேசியவாதியாக மாறினார். முதல் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச் செயலுக்கான விருதுகளைப் பெற்றார்.
முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது கண்டு ஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். 1819 ஆம் ஆண்டில், தமது 30 ஆம் வயதில், முனீக்கில் ஒரு குட்டி வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனது பெயரை விரைவிலேயே "தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி" (National Socialist German Worker"s Party) என்று மாற்றிக் கொண்டது. இக்கட்சியைச் சுருக்கமாக "நாஜிக் கட்சி" என்று அழைத்தனர். இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர் (Fuehrer) ஆனார்.
ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி மிக விரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக் கவிழ்க்க முயன்றது. இந்த முயற்சியை "முநீனக் பீர் மண்டபப் புரட்சி" (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது. ஹிட்லர் கைது செய்யப்பட்டு, அரசுத் துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுதலையானார்.
1928 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி இன்னும் ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதே சமயம் நாஜிக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் தமது 44 வது வயதில் ஜெர்மனியில் தலைமை அமைச்சர் (Chancellor) ஆனார்.
ஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத் துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப் படவே இல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார மீட்சிக்கும் ஓரளவு வழி வகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர்.
ஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த படையெடுப்புகளில் இறங்கினார். சில நிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவை யாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்ஸ் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள் ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதை வலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர் வல்லந்தமாகத் தன் வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக் கண்டு கொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்ட போது கூட (1938 செப்டம்பர்) இந்த நாடுகள் அந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹிட்லருடன் சமரசம் செய்து கொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் "முனீக் ஒப்பந்தம்" என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன. செக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்த உடன்படிக்கை கையெழுத்தான சில மாதங்களுக்குப் பிறகு செக்கோஸ்லாவாக்கியாவின் மற்ற பகுதி முழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத் தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாக மிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களுக்கு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன.
எனினும் போலந்து நாடு ஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர் "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு" ஒப்பந்தம் செய்து கொண்டார். (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சசர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில் தமக்கு தற்காப்புத் தேடிக் கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு போலந்தை ஹிட்லர் தாக்கினார்.
அதற்கு 16 நாட்களுக்குப் பின்பு சோவியத் ரஷியாவும் போலந்து மீது படையெடுத்தது- ஜெர்மனி மீது இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப் பிரகடனம் செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது.
ஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மே மாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகிய நாடுகள் அதன் வசமாயின. ஜூன் மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம் செய்து கொண்டு சரணடைந்தது- அதே ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீது ஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. "பிரிட்டன் சண்டை" (Battle of Britain) எனப் பெயர் பெற்ற இந்தப் போரைப் பிரிட்டன் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன் பின் இங்கிலாந்து மீது ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று.
1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும் ஹிட்லரின் படைகள் வெற்றி கொண்டன. ரஷியாவுடன் செய்து கொண்ட "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு " ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டு ரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியா ஆகிய இரு நாடுகளுடன் ஒரே சமயத்தில் போர் புரிந்து கொண்டே 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான "முத்துத் துறைமுகம்" (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மீது போர்ப் பிரகடனம் செய்தார்.
1942 ஆம் ஆண்டு மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெருமளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அது ஆட்சி செலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்த எல் அலமைன் போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகு ஜெர்மன் இராணுவத்தின் வெற்றி வாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின. ஜெர்மனியின் இறுதித் தோல்வி உறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராக இல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகு ஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும் ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கசப்பான முடிவு ஏற்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது.
ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஹிட்லர் பலி வாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரது ஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ, போரில் ஏற்பட்ட மனக் குமுறலினாலோ செய்யப்பட்டவை என எண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலை செய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிருணயிக்கப்பட்டன. கொலையுண்டவர்களின் உடல்கள் சோதனையிடப்பட்டு அவற்றின் தங்கப்பற்களும், திருமண மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒரு சான்று கூறலாம். போரின் இறுதி நாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் பயன் பாட்டுக்கும் எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரண முகாம்களுக்கு ஆட்களை மாட்டு உந்துகளில் கொண்டு செல்வது தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹிட்லர் ஆணையிட்டிருந்தார்.
பல காரணங்களுக்காக, ஹிட்லரின் புகழ் நீடிக்கும் எனத் தோன்றுகிறது. முதலாவதாக, உலக வரலாற்றிலே மிகக் கொடிய மனிதராக ஹிட்லர் கருதப்படுகிறார். ஹிட்லரின் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, ரோமப் பேரரசன் நீரோ, ரலிகுலா போன்ற கொடியவர்களின் கொடுமை மிக அற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையல் சின்னங்களாக 20 நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படுகிறார்கள். அப்படியானால், உலக வரலாற்றில் மகாக் கொடியவனாக ஒருமனதாக் கருதப்படும் ஹிட்லர் மேலும் பலப்பல நூற்றாண்டுகள்வரை பெயர் பெற்றிருப்பார் என்று ஊகிக்கலாம். உலகின் மிகப் பெரிய போராகிய இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்ற முறையிலும் ஹிட்லரின் பெயர் நிலை பெற்றிருக்கும். இன்று அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு வருவதால் எதிர்காலத்தில் இரண்டாம் உலகப் போரைப் போன்ற பேரளவுப் போர்கள் மூள்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. எனவே, இப்போதிருந்து ஈராயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னருங்கூட உலக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இரண்டாம் உலகப் போர்தான் கருதப்படும்.
ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. இந்தக் காரணத்தினாலும், ஹிட்லரின் புகழ் நீடிக்கும். ஹிட்லர் ஓர் அயல்நாட்டினர் (அவர் பிறந்தது ஆஸ்திரியாவில், ஜெர்மனியில் அன்று). அவருக்கு அரசியல் அனுபவமோ, பணபலமோ, அரசியல் தொடர்புகளோ இருக்கவில்லை. அப்படியிருந்தும், பதினான்கே ஆண்டுகளுக்குள் அவர் ஒரு பெரிய உலக வல்லரசின் தலைவராக ஆனார் என்றால் அது உண்மையிலேயே வியப்பளிக்கிறது. ஹிட்லர் வியக்கத் தக்க நாவன்மை பெற்றிருந்தார். உலக வரலாற்றிலே மிகச் சிறந்த நாவன்மை வாய்ந்தவராக ஹிட்லரைக் கருதலாம். அந்த நாவன்மையின் துணையால்தான் அவர் தம் வழியில் மக்களைச் செயல்படத் தூண்டினார். இறுதியாக அதிகாரத்தைப் பிடித்ததுமூ அந்த கதிகாரத்தை அவர் கொடூரமான வழிகளுக்குப் பயன்படுத்தினார். இதனை அத்துணை விரைவில் மறந்துவிட முடியாது.
உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. அவரது தூண்டுதலினால் ஏற்பட்ட உலகப் போரிலும் நாஜி மரண முகாம்களிலும் கோடிக்கணக்கான மக்கள் பலியானது ஒருபுறமிருக்க, போரின் விளைவாக பலகோடி மக்கள் வீடிழந்தார்கள் அல்லது அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று.
ஹிட்லரின் செல்வாக்கு பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் வேறு இரு அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ஹிட்லருடைய தலைமையின் கீழ் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவர் தோன்றியிராதிருந்தால், நிகழ்ந்திருக்கவே செய்யாது. (இந்த வகையில், சார்லஸ் டார்வின், சைமன் பொலீவார் ஆகியோரிடமிருந்து அவர் முற்றிலும் வேறுபடுகிறார்) ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் நிலவிய நிலைமை ஹிட்லருக்கு சாதகமாக அமைந்தது என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக, அவரது இராணுவ வெறியூட்டும் முழுக்கங்களும், யூதர் எதிர்ப்பு உரைகளும் கேட்போரைப் பிணித்தன. எனினும், ஹிட்லர் செயற்படுத்திய தீவிரமான கொள்கைகளைத் தங்கள் அரசு பின்பற்றியிருக்க வேண்டுமென 1920களிலோ, 1930களிலோ பெரும்பாலான ஜெர்மானியர்கள் விரும்பினார்கள் என்று கருதுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை. ஹிட்லர் செய்ததை மற்ற ஜெர்மன் தலைவர்களும் செய்திருப்பார்கள் என்று கருதுவதற்கும் இடமில்லை. ஹிட்லர் காலத்து நிகழ்ச்சிகளை, புற நோக்கர்கள் எவரும் ஏறத்தாழக்கூட ஊகித்துக் கூறியதில்லை.
இரண்டாவதாக நாசி இயக்கம் முழுவதிலுமே தனியொரு மனிதரே ஆதிக்கம் செலுத்தினார். பொதுவுடைமையின் எழுச்சியில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரும் வேறு பல தலைவர்களும் பெரும் பங்கு கொண்டார்கள். ஆனால், ஹிட்லருக்கு முன்பும், அவருக்குப் பின்பும் நாஜி சமதருமத்தற்குத் தனிச் சிறப்பு வாய்ந்த தலைவர் எவரும் கிடைக்கவில்லை. ஹிட்லர்தான் நாஜிகளை அதிகார பீடத்தில் ஏற்றி வைத்தார். நாஜிகள் ஆட்சியில் நீடித்த காலம் முழுவதிலும் தலைமைப் பதவியைத் தாமே வைத்துக் கொண்டிருந்தார். ஹிட்லர் இறந்ததும், அவருடைய நாஜிக் கட்சியும் அது தலைமை ஏற்றிருந்த அரசும் மாண்டு மடிந்தன.
ஆனால், ஹிட்லருடைய செல்வாக்கு அவரது தலைமுறையின் மீது மிகப் பெருமளவில் விளைவுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், எதிர்காலத்தின் போது அவரது செயல்களின் விளைவுகள் மிகக் குறைவாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. ஹிட்லர் தமது குறிக்கோள்களில் ஒன்றைக் கூட அடையாமல் படுதோல்வியடைந்தார். பிந்திய தலைமுறையினர் மீது அவரது செயல்களின் விளைவு ஏதேனும் இருக்குமானால், அது அவர் கருதியதற்கு நேர்மாறானதாகவே இருக்கும் எனலாம். ஜெர்மனியின் ஆதிக்கத்தையும் நிலப்பரப்பையும் விரிவுப்படுத்த ஹிட்லர் விரும்பினார். அவர் பெருமளவு நிலப்பகுதிகளை வெற்றி கண்ட போதிலும், அந்த வெற்றிகள் அனைத்தையும் அற்ப ஆயுளில் முடிந்தன. இன்று கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் ஒருங்கிணைந்தால் கூட, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தபோது ஜெர்மன் குடியரசில் அடங்கியிருந்த நிலப்பரப்பைவிடக் குறைவான நிலப்பகுதியே அடங்கியிருக்கும். உலகிலிருந்து யூதர்களை அடியோடு அழித்து விட வேண்டும் என்று ஹிட்லர் வெறிகொண்டு அலைந்தார். ஆயினும் அவர் பதவி ஏற்ற பின்பு 15 ஆண்டுகளிலேயே 2,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முதலாகச் சுதந்திரமான யூத நாடு அமைந்தது. பொதுவுடைமையையும், ரஷியாவையும் ஹிட்லர் கடுமையாக வெறுத்தார். எனினும், அவர் இறந்தபோது ஓரளவுக்கு அவர் தொடங்கிய உலகப் போரின் விளைவாக, கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி மீது ரஷியர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தினார்கள். உலகெங்கும் பொதுவுடமையின் செல்வாக்கு பெருமளவுக்குப் பெருகிறது. ஹிட்லர் மக்களாட்சியை இழிவாகக் கருதினார். ஜெர்மனியில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் மக்களாட்சியை அடியோடு ஒழித்துவிட எண்ணினார். ஆனால், இன்று மேற்கு ஜெர்மனியில் மக்களாட்சி சிறப்பாக செயற்பட்டு வருகிறது. ஹிட்லர் காலத்துத் தலைமுறையைச் சார்ந்த ஜெர்மானியர்களைவிட இன்றைய ஜெர்மானியர்கள் சர்வாதிகார ஆட்சியைக் கடுமையாக வெறுக்கிறார்கள்.
ஹிட்லர் தாம் வாழ்ந்த காலத்தில் அளவற்ற செல்வாக்கினைச் செலுத்தியதாலும், வருங்காலத் தலைமுறையின் மீது அவருக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாமற் போனதாலும் ஏற்பட்ட விசித்திரமான கூட்டிணைவின் காரணமாக விளைந்ததென்ன? ஹிட்லர் தம் காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டிருந்தார். அதற்காக, இந்தப் பட்டியலில் அவருக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஷி-ஹூவாங்-தை, அகஸ்டஸ் சீசர், ஜெங்கிஸ்கான் போன்றோரின் செல்வாக்கு அவர்களுக்குப் பின் பல நூற்றாண்டுகள் நீடித்தமையால், ஹிட்லருக்கு நிச்சயமாக அவர்களுக்கு பின்னரே இடமளிக்க வேண்டும். ஹிட்லருக்கு நெருக்கமானவர்களாக நெப்போலியனையும், மகா அலெக்சாந்தரையும் கூறலாம். ஒரு குறுகிய காலத்தில் இவ்விருவரையும் விட மிகப் பெருமளவில் ஹிட்லர் உலக அமைதியைச் சீர்குலைத்தார். அந்த இருவரின் செல்வாக்கு நீண்டகாலம் நீடித்ததன் காரணமாக, அவர்களுக்குச் சற்றுப் பின்னால் ஹிட்லருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.

சனி, 13 ஏப்ரல், 2013

சீனாவின் அடக்குமுறை

திபெத்தை சீனா கைப்பற்றியது: தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்பெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால், அந்த நாட்டின் அதிபராக இருந்த தலாய் லாமா இந்தியாவுக்கு ஓடிவந்தார். அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத், 1959-ம் ஆண்டுவரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது. புத்த மதத்தலைவரான தலாய் லாமா, நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார். 

(ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமா வாகத் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். இந்த கிளர்ச்சி, பிறகு புரட்சியாக மாறியது. புரட்சியை அடக்கும்படி ராணுவத்துக்கு சீன அரசாங்கம் உத்தர விட்டது. ராணுவத்தின் அடக்குமுறையை தாங்க முடியாமல், திபெத்திய மக்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறத் தொடங்கினார்கள். 

தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தற்போதைய தலாய் லாமா, 1935-ம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14-வது தலாய் லாமா.) திபெத் தனி நாடு என்றாலும், சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கி வந்தது. இந்த நிலையில் 1959-ம் ஆண்டில் திபெத்தை கைப்பற்றிக் கொள்ள சீன அரசாங்கம் முடிவு செய்தது. 

சீன ராணுவம் திபெத்துக்குள் நுழைந்தது. திபெத்தின் தெற்கு எல்லையில் நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளுக்கு திபெத்தியர்கள் ஓடுவார்கள் என்று சீனா கருதியது. எனவே அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று நேபாளம், பூடான் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் நாட்டை விட்டு ஓடும் திபெத்தியர்களை சுட்டுக் கொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது. 

சீனா ஆக்கிரமிப்பை தொடர்ந்து தலாய் லாமா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. அவரைப் பற்றி பல்வேறு யூகங்களுடன் செய்திகள் வெளிவந்தன. தலாய் லாமா ஒரு மலையில் இருந்து விழுந்து விட்டார் என்றும், இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியானது. 

அதே நேரத்தில் புரட்சிக்காரர்களுடன் தலாய் லாமா தப்பி ஓடிவிட்டார் என்றும், அவர் திபெத்தை விட்டு வெளிநாட்டுக்கு போய் இருக்க முடியாது என்றும் மற்றொரு தகவல் கூறியது. தலாய் லாமா திபெத்தில் உள்ள "லோகா" என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு இருப்பதாக சீன செய்தி நிறுவனம் அறிவித்தது. 

தலாய் லாமா எங்கிருந்தாலும் பிடித்து விடும்படி சீன படைகளுக்கு சீன அரசு உத்தரவு பிறப்பித்தது. தலாய் லாமாவுக்கு பதிலாக "பஞ்சன் லாமா" என்பவரை திபெத்தின் புதிய நிர்வாகியாக சீன அரசாங்கம் நியமித்தது. இவர் தலாய் லாமாவுக்கு எதிரானவர். சீனாவின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்தவர். திபெத்தில் ஏற்பட்டுள்ள ரத்த புரட்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள "லாமா"க்கள் கேட்டுக்கொண்டார்கள். 

அமெரிக்க தலைநகரில் ஊர்வலம் நடத்தி கோஷம் போட்டார்கள். சீன அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. "திபெத்தில் நடந்த புரட்சி இப்போது முழுவதுமாக அடக்கப்பட்டு விட்டது. 4 ஆயிரம் பேர் கைதிகளாக பிடிபட்டுள்ளனர். ஏராளமான போர் ஆயுதங்கள், துப்பாக் கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன" என்று அறிவித்தது. திபெத் நிலைமை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. 

இந்த விவாதத்தின் போது ஒரு எம்.பி. பேசுகையில், "தலாய் லாமா இந்தியா வந்தால் அவருக்கு அடைக்கலம் கொடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு பிரதமர் நேரு, "அப்பொழுது இருக்கும் சூழ்நிலைப்படி நடந்து கொள்வோம்" என்று பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"சீனாவுடன் நட்புடன் இருக்க இந்தியா விரும்புகிறது. எனினும், திபெத் நாட்டில் நடைபெறும் சம்பவங்களை "வெளிநாட்டு விவகாரம்" என்று தள்ளி விடுவதற்கு இல்லை. திபெத் சுதந்திரம் அடைவதை இந்தியா ஆதரிக்கும். இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறு." 

இவ்வாறு நேரு கூறினார். 

வியாழன், 11 ஏப்ரல், 2013

இபில் கோபுரம்/eiffel tower


 அலெக்ஸாண்டர் குஸ்தாவ் இபில் என்பவரால் 1889-ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சியின் நினைவாக உருவாக்கப்பட்ட இபில் கோபுரமாகும். பாரிஸ் நகரில் அமைந்துள்ள இந்த கோபுரத்தின் உயரம் 984 அடியாகும்.இதற்காக பயன்படுத்திய இரும்புத் துண்டுகள் 15,000 ஆகும்.இதன் அடித்தளம் மட்டும் 330  சதுர அடியாகும். 

திங்கள், 1 ஏப்ரல், 2013

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்). 

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், "ஐ.சி.எஸ்" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்" என்று வீர உரை நிகழ்த்தினார். 

அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை "நேதாஜி" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை. 1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். 

அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட "பார்வர்டு பிளாக்" என்ற அமைப்பை உருவாக்கினார். 

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. 

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 

1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. 

நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். 

வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். 

"சயாதீன்" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். 

ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். 

அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். 

இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார். காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. 

அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். 

அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். 

பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி சம்மதம்


லண்டன் சென்ற இந்தியத் தலைவர்களுடன், பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லி, இந்திய விவகார மந்திரி பெதிக் லாரன்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கும், முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்த உண்மையாகவே முயன்றனர். பேச்சுவார்த்தை பல நாட்கள் நீடித்தது. 

பேச்சு வார்த்தை நடைபெறும்போதே, லண்டனில் பல கூட்டங்களில் ஜின்னா பேசினார். "பாகிஸ்தான் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு ஏற்காவிட்டால், இந்தியாவில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். பேச்சுவார்த்தை முடிவில், பிரதமர் ஆட்லி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் பிரகடனம் வருமாறு:- பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி சம்மதம்

"இந்தியாவின் இருபெரும் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையே ஒற்றுமை ஏற்படுத்த நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால், இந்தியாவில் அபாயகரமான சூழ்நிலை உருவாகியிருப்பதை பிரிட்டிஷ் அரசு உணருகிறது. 1948 ஜுன் மாதத்துக்கு முன், இந்தியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து விடுவது என்று, எனது அரசு முடிவு செய்திருக்கிறது. 

அதிகாரத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை அது சாத்தியமற்றதாகி விட்டால், இப்போதுள்ள மாகாண அரசுகளிடமே அதிகாரத்தை ஒப்படைத்து விடலாமா, அல்லது வேறு ஏதேனும் நல்ல வழி உள்ளதா என்று பிரிட்டிஷ் அரசு ஆலோசிக்கும். 

இதற்கிடையே, இந்தியாவில் இப்போது வைஸ்ராயாக பதவி வகிக்கும் வேவல், இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்படுகிறார். அவருக்குப்பதிலாக, புதிய வைஸ்ராயாக லார்டு மவுண்ட்பேட்டன் நியமிக்கப்படுகிறார். 1947 மார்ச் மாதம் அவர் பதவி ஏற்பார். அவருடைய முக்கிய வேலை, ஆட்சிப் பொறுப்பை இந்தியர்களிடம் நல்ல முறையில் ஒப்படைத்துவிட்டு திரும்புவதுதான்."

இவ்வாறு ஆட்லி அறிவித்தார். 

இதற்கிடையே இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில், ஆட்லி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது சர்ச்சில் பேசுகையில், "இந்தியர்கள் அற்பபதர்கள். அவர்களுக்குப் பயந்து இந்தியாவில் இருந்து வெளியேறுவது இழுக்கு" என்று கூறினார். 

சைமன் கமிஷன் தலைவராக இந்தியாவுக்கு வந்து அவமானப்பட்ட சைமனும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். ஒரு கட்டத்தில், இந்தத் தீர்மானம் நிறைவேறிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், முன்பு இந்தியாவில் வைஸ்ராயாக இருந்து, காந்தியடிகளுடன் உடன்பாடு கண்ட நல்லவரான இர்வின் பிரபு, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உணர்ச்சிகரமாகவும், ஆணித்தரமாகவும் பேசினார். 

அவருடைய பேச்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இந்தியா மீது அனுதாபம் ஏற்படச் செய்தது. முடிவில் ஓட்டெடுப்பு நடந்தது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 185 பேரும், எதிராக 337 பேரும் ஓட்டளித்தனர். தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்திய சுதந்திரத்துக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம் மறைமுகமாக அங்கீகாரம் அளித்துவிட்டது. அதனால் இந்தியத் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மவுண்ட்பேட்டன் வருகை ஆட்லி அறிவித்தபடி, வைஸ்ராய் வேவல் 1947 மார்ச் 23-ந்தேதி இந்தியாவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு மறுநாள், புதிய வைஸ்ராயாக லார்டு மவுண்ட்பேட்டன் பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் இந்தியத் தலைவர்களை ஒவ்வொருவராகவும், கூட்டாகவும் அழைத்து இந்திய சுதந்திரம் பற்றி அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டார். 

காந்தியை அழைத்துப் பேசியபோது, "பிரிவினை தவிர நீங்கள் வேறு எதைச்சொன்னாலும் ஏற்கிறேன்" என்று காந்தி தெரிவித்தார். "அப்படியானால், இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண்பது? பிரிவினையைத் தவிர்க்க, தேசப் பிதாவான உங்கள் யோசனை என்ன?"என்று மவுண்ட்பேட்டன் கேட்டார். 

"ஜின்னாவை பிரதமராக்கி அவர் விரும்புகிறவர்களைக் கொண்ட மந்திரிசபை அமைக்கலாம்" என்று காந்தி தெரிவித்தார். இதுபற்றி இந்தியத் தலைவர்களின் கருத்தை மவுண்ட்பேட்டன் கேட்டார். காந்தியின் யோசனைக்கு நேருவும், பட்டேலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகக் காந்தி தன் யோசனையை வாபஸ் பெற்றுக்கொண்டார். 

பிரிவினை ஒன்றே வழி எல்லாத் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியபிறகு. "இந்தியா சுதந்திரம் அடைவதற்கு, பிரிவினை ஒன்றுதான் வழி" என்ற முடிவுக்கு வந்தார் மவுண்ட்பேட்டன். இதனைத்தொடர்ந்து வல்லபாய் படேலை அழைத்துப் பேசினார். "ஒற்றுமை இல்லாத - பலமற்ற பெரிய இந்தியாவைவிட, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் அமையும் சுதந்திர இந்தியா வலுவானதாக இருக்கும்" என்று கூறினார். 

அவருடைய கருத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த படேல், பிரிவினைக்குச் சம்மதித்தார். அடுத்து நேருவின் நண்பரும், சிறந்த ராஜதந்திரியுமான கிருஷ்ணமேனனை அழைத்துப்பேசினார். "இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்களை சம்மதிக்கச் செய்வதுதான்" என்று ஆணித்தரமாக எடுத்துக்கூறி, கிருஷ்ணமேனனைச் சம்மதிக்கச் செய்தார். 

பிறகு கிருஷ்ணமேனன், நேருவைச் சந்தித்து, வைஸ்ராயுடன் தான் நடத்திய பேச்சுவிவரத்தைத் தெரிவித்தார். "இந்தியாவுக்கு உடனடியாக சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷார் தயாராகி விட்டார்கள். பாகிஸ்தான் கோரிக்கை மட்டும்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஜின்னாவும், நாமும் ஒன்றுபட்டு வாழ்வது நடக்காத காரியம். பிரிவினைக்குச் சம்மதித்து, இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்" என்று கிருஷ்ணமேனன் கூறினார். 

இதுபற்றி தீவிரமாக யோசித்த நேரு பிரிவினைக்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். பிரதமர் நேருவும், படேலும் பிரிவினைக்குச் சம்மதித்துவிட்ட பிறகு, காந்திஜியைச் சந்தித்தார், மவுண்ட்பேட்டன். தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றியும், பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சம்மதித்துவிட்டது பற்றியும் தெரிவித்தார். பிரிவினைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார், காந்தி. 

"என் பிணத்தின் மீதுதான் பிரிவினையை அமுலுக்கு கொண்டு வரமுடியும்" என்றார். அபுல்கலாம் ஆசாத்தும் பிரிவினையை எதிர்த்தார். பிரிவினை பற்றி தலைவர்களிடையே விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, வடநாட்டில் மீண்டும் கலவரம் வெடித்தது. பல நகரங்கள் தீப்பற்றி எரிந்தன. காந்திஜியை நேருவும் மற்ற தலைவர்களும் சந்தித்து, பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதிக்கும்படி வேண்டினார்கள். 

முடிவில், "இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்பதே என் லட்சியம். இந்தியா சுதந்திரம் பெறவும், வகுப்புக் கலவரங்களுக்கு முடிவு காணவும் பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதிக்கிறேன்" என்று காந்தி கூறினார். இதன்பின் நேரு, ஜின்னா, சீக்கிய தலைவர் பல்தேவ்சிங் ஆகிய மூவரும் ரேடியோவில் தனித்தனியே பேசினார்கள். 

"தேசப்பிரிவினை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது" என்று அவர்கள் அறிவித்தார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்கு ஏற்பாடு நடக்கிறது என்பதை அறிந்ததும், பஞ்சாபிலும், வங்காளத்திலும் தனி நாடு கோரிக்கை எழுந்தது. "பஞ்சாப் பஞ்சாபியருக்கே", "வங்காளம் வங்காளியருக்கே" என்று குரல் எழுப்பினார்கள். இந்நிலையில், வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் 18-5-1946-ல் லண்டனுக்குச் சென்றார். 

பிரதமர் ஆட்லியுடனும், இந்திய விவகார மந்திரி லாரன்சுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஓர் இறுதி முடிவுடன் 31-5-1946-ல் இந்தியா திரும்பினார். மவுண்ட்பேட்டன் தன் திட்டத்தை, இந்தியத் தலைவர்களிடம் தெரிவித்து அவர்களுடைய ஆதரவைக் கோரினார். அந்தத் திட்டம் வருமாறு:- 

(1) 1948 ஜுன் மாதத்துக்குள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று இங்கிலாந்துப் பிரதமர் ஆட்லி முன்பு அறிவித்தார். அது மாற்றப்பட்டு 1947 ஆகஸ்ட் 15-ந்தேதியே சுதந்திரம் தருவதென்று, பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

(2) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற சுதந்திர நாடு அமைக்கப்படும். பஞ்சாப்பைச் சார்ந்த பகுதிகள் மேற்கு பாகிஸ்தானாகவும், வங்காளத்தைச் சேர்ந்த பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானாகவும் அமையும். 

(3) இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்த அதிகாரங்கள், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மாற்றப்படும். 

- இதுவே, மவுண்ட்பேட்டன் அறிவித்த திட்டம். காந்தி ஒப்புதல் இந்தத் திட்டத்தைக் காந்தியிடம் கொண்டு போய்க்காட்டினார், மவுண்ட்பேட்டன். அப்போது காந்தி, மவுன விரதத்தில் இருந்தார். அதனால், தன்னுடைய ஒப்புதலையும் மகிழ்ச்சியையும் அவர் எழுதிக்காட்டினார். ஜுன் 10-ந்தேதி முஸ்லிம் லீக் பேரவை கூடி, மவுண்ட்பேட்டனின் திட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. 

காங்கிரஸ் கமிட்டி மவுண்ட் பேட்டனின் திட்டம் பற்றி ஆலோசிக்க, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஜுன் 14-ந்தேதி கூடியது. இந்தக் கூட்டத்தில் காந்திஜி உருக்கமாகப் பேசினார். "இந்தியா விடுதலை பெறவேண்டும் என்பதற்காகவே பிரிவினைக்குச் சம்மதிக்கிறேன்" என்று கூறினார். விவாதத்தின் முடிவில் ஓட்டெடுப்பு நடந்தது. பிரிவினைக்கு ஆதரவாக நேரு, பட்டேல், கோவிந்த வல்லப பந்த் உள்பட 157 பேரும், எதிர்த்து 29 பேரும் ஓட்டளித்தனர். 

32 பேர் நடுநிலைமை வகித்தனர். கவனர் ஜெனரல் பதவி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கொஞ்ச காலம் மவுண்ட்பேட்டனே கவர்னர் ஜெனரலாக இருப்பதற்கு காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் இசைவு தந்திருந்தன. பிறகு ஜின்னா தன் கருத்தை மாற்றிக்கொண்டு, "சுதந்திர பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக நானே பொறுப்பேற்கப் போகிறேன்" என்று அறிவித்தார். 

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் முன்பு ஒப்புக்கொண்டபடி, மவுண்ட்பேட்டனே சுதந்திர இந்தியக் கவர்னர் ஜெனரலாக இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தனர். அரசாங்க சொத்தைப் பிரிப்பது, ராணுவத்தைப் பிரிப்பது ஆகிய பணிகளைக் குறித்த நேரத்தில் மவுண்ட்பேட்டன் செய்து முடித்தார். 

பிரதமர் நேருவும், மற்ற மந்திரிகளும் அதற்குத் துணை புரிந்தனர். தேசியக்கொடி அசோகச் சக்கரம் பொறித்த மூவர்ணக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்க, இந்திய அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜனகணமன" என்ற பாடல், இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.