திங்கள், 14 நவம்பர், 2016

திடீரென்று ஏன் இந்த ஏரி இரத்த சிவப்பாய் உருமாறியது..?!

துருக்கி - ஈரான் எல்லையில் உள்ள உர்மியா ஏரியானது ஒரு எண்டோர்ஹிக் உப்பு ஏரி ஆகும், அதாவது தன்னுள் கொண்டிருக்கும் நீரை பிற நீர் ஆதாரங்களில் கலக்க விடாத வண்ணம் நீர் வைப்பு கொண்டிருக்கும் ஒரு மூடிய வடிகால் ஏரியாகும்.
ஈரானில் உள்ள கிழக்கு அஜர்பைஜான் மற்றும் மேற்கு அஜர்பைஜான் ஆகிய மாகாணங்களில் அமைந்துள்ள இந்த ஏரியானது மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய ஏரியாகும்.
சுமார் 5,200 சதுர கி.மீ பரப்பளவு, 140 கி.மீ நீளம், 55 கி.மீ அகலம் மற்றும் 16 மீட்டர் (52 அடி) ஆழம் கொண்ட இதுதான் பூமியில் ஆறாவது பெரிய உப்புநீர் ஏரியாகும். பெரும்பாலான ஏரிகளை போலவே பச்சை நிறமாக காட்சியளித்த இந்த உர்மியா ஏரி, திடீரென்று இரத்த சிவப்பாய் உருமாறியது..?!  பதிவு :

பதிவு :

நாசாவின் புவி கண்காணிப்பு (NASA's Earth Observatory) உர்மியா ஏரியின் இந்த உருமாற்றத்தை தெளிவாக பதிவு செய்துள்ளது.
 மாற்றத்திற்கு காரணம் :

மாற்றத்திற்கு காரணம் :

இந்த ஏரி இன்று இரத்த சிவப்பாய் காட்சியளிக்க, அதன் மாற்றத்திற்கு காரணம் அதனுள் எதோ கலக்கப்பட்டு விட்டது அல்லது அதனுள் இருந்து எதோ ஒன்று எடுக்கப்பட்டது விட்டது என்று நினைக்க வேண்டாம்.
ஏப்ரல் 23 :

ஏப்ரல் 23 :

2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உர்மியா ஏரி ஒரு வசந்த பச்சை நிறத்தில் இருந்துள்ளது.
ஜூலை 18 :

ஜூலை 18 :

பின்பு முழுமையாக 3 மாத கால இடைவெளி கூட இல்லாமல் 2016-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று எடுக்கப்பட்ட உர்மியா ஏரி புகைப்படத்தில் அது தற்போது இருப்பது போன்றே சிவப்பு தொனியில் மாறி இருந்தது.
அறிவியல் :

அறிவியல் :

இதற்கு விசித்திரமான காரணங்களை யோசிக்க வேண்டாம் இந்த மாற்றத்திற்கு காரணம் நிச்சயமான அறிவியல் தான் அதாவது - நம்பமுடியாத வறண்ட கோடை தான்.
நீர் மட்டம் :

நீர் மட்டம் :

அதனால் தான் ஏரியில் நீர் மட்டம் குறைந்துள்ளது, ஏரியில் நீர்மட்டம் அதிகம் குறையவில்லை என்றாலும் கூட அதில் நிறைய உப்பு இருக்கிறது.
 உப்புத்தன்மை :

உப்புத்தன்மை :

ஏரி தண்ணீரின் அதிக உப்புத்தன்மை (The higher salinity of the water) தான் அதனை முன்பு கண்டது போல் பச்சை நிறத்தில் இல்லாது சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது.
கிரேட் சால்ட் லேக் :

கிரேட் சால்ட் லேக் :

இதே போன்ற ஒரு விசித்திரமான மாற்றத்தை நாம் பிற ஏரிகளிலும் காண முடியும் அதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு - ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கிரேட் சால்ட் லேக் (Great Salt Lake,) - உட்டா ஏரி..!
ஒரு பாதி :

ஒரு பாதி :

உட்டா ஏரியின் நடுவே ஒரு இரயில் கடல் பாலம் அமைக்கப்ட்டது அதனை தொடர்ந்து உர்மியா ஏரிக்கு ஏற்பட்டது போன்றே உட்டா ஏரிக்கு ஒற்றைபக்க நீர்மட்ட குறைவு ஏற்பட ஒரு பாதி பச்சை நிறத்திலும் மறுபாதி சிவப்பு நிறத்திலும் காட்சி அளித்தது.
தற்காலிக மாற்றம் :

தற்காலிக மாற்றம் :

இவைகள் ஒரு தற்காலிக மாற்றமாகத்தான் இருக்கும், கடந்த காலங்களில் வறட்சியின் போது உர்மியா ஏரியானது சிவப்பாகவும் மழை காலங்களில் பச்சை நிறத்திற்கு திரும்பியும் உள்ளது.
சாத்திய கூறுகள் :

சாத்திய கூறுகள் :

ஆனால், நாசாவின் கணிப்போ, ஈரான் வறட்சி அதிகரிக்கும் அதனால் உர்மியா ஏரியின் நிரந்தரமான நிறமாய் இரத்த சிவப்பு இருக்க சாத்திய கூறுகள் உண்டு என்கிறது.
மேலும் படிக்க :

இது சூரியனை விட சக்தி வாய்ந்தது..! அதென்ன தெரியுமா..?

விண்வெளியை மனிதர்களாகிய நாம் ஆராய்த்தொடங்கிய நாள் முதல் அதன் தூய்மையான அழகு மூலம் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் அனுதினமும் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.
பதிவு செய்யப்பட்டுள்ள பல அற்புதமான படங்கள், நிகழ்த்தப்பட்டுள்ள எண்ணற்ற கண்டுபிடிப்புகள் மூலம் இந்த பரந்த அண்டத்தில் எந்தவொரு நேரத்திலும் நாம் இங்கே தனியாக, பலமானவராக இல்லை என்பதை உணர்ந்துகொண்ட இருக்கிறோம். அதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் இது..!  ஒரு இளம் நட்சத்திரம் :

ஒரு இளம் நட்சத்திரம் :

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இளம் நட்சத்திரம் நமது விண்மீனில் உலா சூரியனை விட சுமார் 30 மடங்கு பெரிய அளவில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஒளியாண்டுகள் :

ஒளியாண்டுகள் :

அந்த நட்சத்திர பூமியில் இருந்து சுமார் 11,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
100,000 ஆண்டு :

100,000 ஆண்டு :

சூரியன் போன்ற நட்சத்திரம் உருவாக ஒரு மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது, மறுபக்கம் இதே போன்ற சராசரி அளவிலான பாரிய நட்சத்திரங்கள் வேகமாக 100,000 ஆண்டுகளில் உருவாகிறது.
ஒட்டுமொத்த ஆயுட்காலம் :

ஒட்டுமொத்த ஆயுட்காலம் :

நமது சூரியனை போன்றே இந்த நட்சத்திரம் ஆனது தனது சொந்த எரிபொருளை எரித்து ஒரு குறுகிய ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை விளைவிக்கிறது.
மிகவும் இளமை :

மிகவும் இளமை :

அதாவது அந்த நட்சத்திரங்கள் மிகவும் இளமையானதாக இருப்பதால் இப்போது அதனை அடைவது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் கடினமான ஒரு காரியமாகும்.
கெப்லரியன் :

கெப்லரியன் :

அதிக அலை நீளங்கள் கொண்ட தொலைநோக்கிகளின் உதவி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட எம்எம்1 நட்சத்திரம் ஆனது ஒரு கெப்லரியன் வட்டால் சூழப்பட்டுள்ளது.
அருகாமை :

அருகாமை :

உடன் அந்த பெரிய வட்டு அதன் நட்சத்த்திரம் அருகாமையில் இருக்க வேகமாகவும், தொலைவில் செல்ல மெதுவாகவும் சுழல்வது கண்டறியப்பட்டுள்ளது.
வெகுஜன வாயு :

வெகுஜன வாயு :

ஆராய்ச்சியாளர்களின் தத்துவார்த்த கணக்கீடுகளின்படி அந்த வட்டு உண்மையில் இன்னும் தன்னுள் அதிக வெகுஜன வாயு மற்றும் தூசி அடுக்குகளை மறைத்து வைத்திருக்க முடியும்.
கடினமான செயல்முறை :

கடினமான செயல்முறை :

இதுவரையிலாக, பிரபஞ்சத்தில் பாரிய நட்சத்திரங்கள் எப்படி வளர்கினறன என்ற ஆய்வு ஒரு கடினமான செயல்முறையாகவே இருந்து வருகிறது.
எப்படி :

எப்படி :

இந்த சுவாரஸ்யமான கண்டுபிடிப்பின் மூலம் இவ்வகை பாரிய நட்சத்திரங்கள் உருவாவது எப்படி என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க :

இண்டர்நெட் இல்லாமல் போட்டோ அனிமேஷன் உருவாக்குவது எப்படி.?

கூகுள் போட்டோஸ் ஆப் அடிக்கடி, கிட்டத்தட்ட ஒவ்வொரு பயனர்களுக்கும் சுவாரஸ்யமான மேம்படுத்தல்களை வழங்கி கொண்டே உள்ளது. அதிக மடங்கு பயனர்களை கொள்வது, பயனர்களை நடைமுறையில் மகிழ்ச்சியாக வைத்திருத்தல் மற்றும் ஒரு பயனர் நட்பு இடைமுகம் உருவாக்குதல் ஆகிவைகள் தான் கூகுள் போட்டோஸ் ஆப்பின் நோக்கமாகும்.
சமீபத்திய கூகுள் போட்டோஸ் மேம்படுத்தல் ஆனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புகைப்படங்களை ஏற்பாடு செய்ய, திருத்த மற்றும் பகிர்ந்து மற்றும் ஒரு சுவாரஸ்யமான அனிமேஷன் உருவாக்கவும் அனுமதிக்கிறது.  திறன்

திறன்

இந்த புதிய மேம்படுத்தல் ஆனது பயனர்கள் தங்கள் மொபைல் தொகுப்பு புகைப்படங்களில் இருந்து இணைய இணைப்பில் இல்லாத போதும் கூட, போட்டோ அனிமேஷனை உருவாக்கும் திறனை வழங்கும்.
எளிய வழிமுறை

எளிய வழிமுறை

இந்த புதிய மேம்படுத்தலை அனுபவிக்க, பயனர் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மேம்படுத்தப்பட்ட கூகுள் போட்டோஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் வெறுமனே இணைய இணைப்பு இல்லாமல் ஒரு புகைப்பட அனிமேஷன் உருவாக்க கீழ்வரும் 4 எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.
வழிமுறை #01

வழிமுறை #01

முன்னரே கூறியபடி ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று தங்களது ஸ்மார்ட் சாதனத்தில் கூகுள் போட்டோஸ் ஆப்தனை சமீபத்திய பதிப்பால் புதுப்பிக்க வேண்டும்
வழிமுறை #02

வழிமுறை #02

அப்டேட் மற்றும் இன்ஸ்டால் செய்த பின்னர் பயனர் தங்களது ஆண்ட்ராய்டு தொலைபேசியின் இண்டர்நெட்டை ஆப் செய்துவிட்டு கூகுள் போட்டோஸ் ஆப்தனை திறக்கவும்.
வழிமுறை #03

வழிமுறை #03

கூகுள் போட்டோஸ் பயன்பாட்டை திறந்த பின்னர், பயனர் திரையின் மேல் வலது மூலையில் கிளிக் செய்ய ஒரு பட்டியல் தோன்றும், பட்டியலில் இருந்து "கிரியேட் நியூ அனிமேஷன்" என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை #04

வழிமுறை #04

புதிய அனிமேஷன் உருவாக்க என்ற விருப்பத்தை கிளிக் செய்த பின்னர், பயனர் படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்கப்படும். உங்கள் தொலைபேசி கேலரியில் இருந்து 50 புகைப்படங்களை தேர்வு செய்ய முடியும். பின்னர் தேவைக்கேற்ப அனிமேஷன்களை நிகழ்த்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க

1956-ல் 36000 அடி உயரத்தில் நிகழ்ந்த மர்மம், என்ன அது..?!

தடைநீக்கம் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பெரிய எண்ணிக்கையிலான யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு சார்ந்த புகைப்படங்கள் ஏராளம். அந்நிய விமானங்களை உலகம் முழுதும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருவதால் அண்டத்தில் வேற்று கிரக நாகரீகங்கள் உண்டு அவர்கள் பிற கிரகங்களுக்கு வருகை தருவதுண்டு என்பது தெளிவாகிறது.
அவைகள் ஒருபக்கம் இருக்க அரசாங்க அதிகாரிகளான விண்வெளி வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் கூட தானாக முன்வந்து அன்னிய வாழ்க்கை குறித்துப் பேசுவதும், அறிவார்ந்த அன்னிய இனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளன என்று நம்பிக்கை அளிப்பதும் அவ்வப்போது நடப்பதுண்டு.
அப்படியான ஒரு நம்பிக்கையான நிகழ்வு தான் 1956-ஆம் ஆண்டு சுமார் 36,000 ஆதி உயரத்தில் நிகழ்ந்துள்ளது..! புகைப்பட பதிவு :

புகைப்பட பதிவு :

ஏகப்பட்ட தவறான அல்லது விரிவான, போலியான கட்டுக்கதைகள் என்று யுஎஃப்ஒ வழக்குகள் வெளியாகினாலும் கூட சில யுஎஃப்ஒ (குறிப்பிடத்தக்க சதவீதம்) அனைத்து விளக்கத்தை பெற மறுக்கின்றன, எடுத்துக்காட்டுக்கு கனடா நாட்டு விமானிகளின் அந்நிய விமான புகைப்பட பதிவு..!
ஏலியன் கிராஃப்ட் :

ஏலியன் கிராஃப்ட் :

1956-ம் ஆண்டு இரண்டு கனடிய விமானப்படை விமானிகள் 36,000 அடி ( பயன்பாட்டில் சுமார் 11 ​​கி.மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு 'ஏலியன் கிராஃப்ட்'தனை கண்டுள்ளனர் உடன் அதன் மிக அசாதாரணமான படங்களையும் பதிவு செய்துள்ளனர்
4 கி.மீ.தொலைவில் :

4 கி.மீ.தொலைவில் :

அந்த மர்ம பொருளானது விமானத்தில் இருந்து சுமார் 4 கி.மீ.தொலைவில் இருந்துள்ளது மேலும் அது 45-க்கும் மேற்பட்ட நொடிகள் நிலைத்து நின்றுள்ளது.
வட்டு வடிவிலான பிரகாசமான ஒளி :

வட்டு வடிவிலான பிரகாசமான ஒளி :

விமானிகள் படி, அந்த மர்மமான விமானம் ஆனது நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் வட்ட வடிவிலான இது ஒரு பிரகாசமான ஒளி, ஒரு பளபளப்பான வெள்ளி டாலர் போன்று இருந்துள்ளது.
தெளிவான விளக்கம் :

தெளிவான விளக்கம் :

விமானத்தில் இருந்து கீழ் தொலைவாகவும், மேகங்களுக்கு மேலும் மிதந்துள்ள அந்த மர்ம பொருள் ஆனது சூரிய ஒளியை விட கணிசமான வெளிச்சமாக பிராகாசித்தது என்றும் விமான ஓட்டிகள் தெரிவித்திருந்தனர்.
ஆதரவு :

ஆதரவு :

இந்த நிகழ்வு மற்றும் புகைப்படம் சார்ந்த தெளிவான விளக்கம் கிடைக்கப் பெறவில்லை, இருப்பினும் மேற்கண்ட அனைத்து தகவல்களுக்கும் முன்னாள் கனடிய பாதுகாப்பு மந்திரியான பால் ஹெல்யர் ஆதரவு அளித்துள்ளார்.

வீடியோ :

முன்னாள் கனடிய பாதுகாப்பு மந்திரியான பால் ஹெல்யர் ஆதரவு அளித்து பேசிய வீடியோ பதிவு..!
மர்மமான வான்வெளி விந்தை :

மர்மமான வான்வெளி விந்தை :

மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும், 21-ஆம் நூற்றாண்டின் மிகவும் மர்மமான வான்வெளி விந்தை ஆய்வுகளின் (most mysterious aerial phenomenon of the 21st century) கீழ் தொகுக்கப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :

வேண்டுமென்றே, எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்ட கோவில்..!?

வரலாறு தவறானது, அது நமக்கும் தெரியும், அது எல்லோருக்கும் தெரியும். சந்தேகம் என்றால் நமது வரலாற்றுப் புத்தகங்களை ஒருமுறை புரட்டிப் பாருங்கள், வரலாறு தவறானது என்பதை தீவிரமாக புரிந்துக்கொள்ள முடியும். இன்னும் வெளிப்படையான உண்மை என்னவென்றால் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூட மெதுவாக வரலாற்றில் சில விஷயங்கள் தீவிரமாக மாற்றப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டே வருகிறார்கள்.
கடந்த இரண்டு தசாப்த காலங்களாக உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் வரலாற்றிக்கு முந்திய, அதாவது உருவாக்கம் பெற்ற காலத்திற்கு சம்பந்தம் இல்லாத பல பண்டைய தளங்களை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.
மிகவும் மேம்பட்ட நாகரிகம் :

மிகவும் மேம்பட்ட நாகரிகம் :

ஆனால் வரலாறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம் கிரகத்தில் வாழந்த மிகவும் மேம்பட்ட நாகரிகங்கள் மற்றும் மேம்பட்ட பண்டைய மனிதனால் தான் உருவாக்கம் பெற்றுள்ளது என்று அறிஞர்கள் இன்று பரிந்துரைக்கின்றனர், அதற்கு நம்ப முடியாத ஆதாரங்கள் பல உண்டு.
தொலைதூர கடந்த காலங்கள் :

தொலைதூர கடந்த காலங்கள் :

முக்கியமாக பூமியின் தொலைதூர கடந்த காலங்களை நிரூபிக்கும் மிகவும் மேம்பட்ட பண்டைய தளங்கள் அதாவது 12000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தளங்கள், முக்கியமாக வேண்டுமென்றே, எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்ட கொபெக்லி டேப் கோவில்..!
மிகவும் மேம்பட்ட நாகரிகம் :

மிகவும் மேம்பட்ட நாகரிகம் :

கொபெக்லி டேப் (Göbekli Tepe) - இதை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால் - சாத்தியமற்றது.
 உறுதி :

உறுதி :

எந்த ஒரு சந்தேகமும் இன்றி இந்த கிரகத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் நம்பமுடியாத பண்டைய இடங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது மட்டும் மிக உறுதி.
மாபெரும் சுண்ணாம்பு தொகுதிகள் :

மாபெரும் சுண்ணாம்பு தொகுதிகள் :

ஆராய்ச்சியாளர்கள் இதுவரை புரிந்து கொண்டதில் இருந்து பெரும்பாலான பாலைவன ஸ்டோன்ஹெஞ்களில் சேகரிக்கப்பட்ட மாபெரும் சுண்ணாம்பு தொகுதிகள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கோவில்.
 13 ஆண்டுகளுக்கு பிறகு  :

13 ஆண்டுகளுக்கு பிறகு :

இதை தோண்டி கண்டுபிடித்த 13 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புராதன விசாரணையில், தேடலில் கற்களை வெட்ட பயன்படுத்ப்படும் கருவி எதையும் மீட்கவில்லை.
5% மட்டுமே :

5% மட்டுமே :

இந்த மாபெரும் கோயில் வளாகத்தில் வெறும் 5% மட்டுமே தோண்டி வெளிபடுத்தப்பட்டுள்ளது. மீதி மண்ணுள் புதைந்துள்ளது.
இறுதி ஆதாரம் :

இறுதி ஆதாரம் :

உடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேம்பட்ட கலாச்சாரங்கள் நம் கிரகத்தில் வசித்துள்ளனர் என்பதற்கான இறுதி ஆதாரம் என்று கூட இதை குறிப்பிடலாம்.
பெரிய கல் வட்டங்கள் :

பெரிய கல் வட்டங்கள் :

மூன்று பெரிய கல் வட்டங்கள் கொண்ட இந்த மர்மமான கோவில் வேண்டுமென்றே தொலைதூர கடந்த காலத்தில் எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்டுள்ளது.
பண்டிகை  :

பண்டிகை :

இது போன்ற கிரகத்திலேயே பெரிய கல் அமைப்புகளை படைத்தது அதில் பண்டிகை மற்றும் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற பண்டைய மனித குலத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
குழப்பம் :

குழப்பம் :

பெரும்பாலான முக்கிய அறிஞர்களின் குழப்பம் என்னவென்றால் இடிபாடுகளில் இருந்து ஒரு கல் வெட்டு கருவியைக்கூட கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்பது தான்.
துருக்கி :

துருக்கி :

இந்த பண்டைய தளம் துருக்கி நாட்டின் சன்லிஉற்பா மாகாணத்தின் ஓரன்சிக் என்ற இடத்தில் அமைக்கப் பெற்றுள்ளது.
10 - 8 புத்தாயிரம் கி.மு :

10 - 8 புத்தாயிரம் கி.மு :

கடல் மட்டத்திலிருந்து சுமார் 760 மீ (2,493 அடி) உயரத்தில் இருக்கும் இப்பகுதியானது காலத்திற்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :