தேடு

எனது வரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது வரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஹைக்கூ / haiku


லப்பிடமில்லா கற்கண்டு 
குழந்தையின் சிரிப்பு.........

ஹைக்கூ / haiku




தினம் நூறு முத்தம் 
வெட்கத்தில் அவள் புகைப்படம்...

ஹைக்கூ / haiku




ம்முடன் 
கூடவே வரும் 
நாகரீக எமன் 
கைப்பேசி...........

ஹைக்கூ / haiku




கூவம் ஆறும் 
மணக்கும் 
நீ கடக்கும் வரை....

ஹைக்கூ காதல்


ன்னை பற்றிய 
ஹைக்கூ கவிதை 
எழுத என்னும்போது 
உனது பெயரை தவிர 
வேறொன்றும் தோன்றவில்லை.... 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மரம் வளர்ப்போம் /save trees


டியோடு மரத்தை 
வேகமாய் வெட்டி 
வெயில் சுடும்போது 
மனதும் சுட்டும் 
வானத்தை வெறுத்து 
பார்க்கும் கண்கள்.....
இன்றைக்காவது மழைவருமா.....? 

ஹைக்கூ





கோவிலினுள் கற்பழிப்பு
வெளியே வீச்சரிவாளுடன்
சாமி காவல்

வியாழன், 18 ஏப்ரல், 2013

IPL கிரிக்கெட்



ஏம்பா நமக்கு
தெரிஞ்ச
கபடி,ஹாக்கியெல்லாம்
இப்படி காட்டுனா
கலக்குவோம்ல...
கண் கலங்கி
கைதட்டி பார்க்கும்
கண்கள்.......................
"IPL கிரிக்கெட் "
ம்ம் I FEEL UP.......................

பீர் கடன்/BEER

 விழித்தவுடன் விழிப்புடன் 
வெளியே செல்கிறேன் 
நேற்று பீருக்காக 
நண்பனிடம் வாங்கிய 
நூறு ரூபாய் கடன்.................. 

கூவம்


கூவம் ஆற்றை
கடக்கும்போது
முகம் கூசி
கடக்கிறோம்...

'AC'யிலே வசித்தாலும்
'IC'யிலே வைத்து
வதைக்கும் நோய்கள்....

கூவ வாசிகளோ
கூவி கேட்கிறார்கள்
ஏம்பா டெங்குனா
என்னப்பா ??????????????????????


ஆட்டோகிராப்


ஆட்டோகிராப்

ஆண்டவனிடம் 

ஆட்டோகிராப் வாங்க வேண்டும்!

எனது தலையெழுத்து

எப்படி என்று

அவன் கையெழுத்தில்

பார்த்துவிட... 

பேஷன்


பேஷன்

இப்போது எங்கும்

ஏழை, பணக்காரன்

வித்தியாசம் தெரிவதில்லை

கிழிந்த உடைகள்

பேஷனாகி போனதால்....! 

கருப்பு கண்ணிர்!


கருப்பு கண்ணிர்!

யாருக்கும் எந்த 
 கருப்பு கண்ணிர்!
தீங்கும் செய்யவில்லை

பிறகு ஏன்

என்னை மட்டும் 

துக்கத்தின் அடையாளம்

ஆக்கினீர்கள்.......! 

ஹைக்கூ..!


ஹைக்கூ..!

ஐஸ் கிரீமாக நீ...

கரைவது ஏனோ 

நான்தான் !

ஹைக்கூ...


ஹைக்கூ...

"கருப்பு நிலா

வெண்ணிற மேகங்கள் 

அவள் கண்கள்"

மனதின் முடிவில்லா தேடல்/ galaxy




தோ எனது
தேடலில் இந்த
புவியும் சிறு
பந்தாக....................

பிரபஞ்சத்தை தாண்டிய
மற்றொரு பிரபஞ்சத்தை
அடைந்து
எனது தேடலின்
தொடக்கம் இருக்க
தேடுகிறேன் ஏதோ
ஒன்றை.........................

பாட்டி கதை

கதை கதையாய்
ஆயிரம் கதைகள்
பாதி கதையிலேயே
தூங்கும் எனது
குழந்தை வயது..............
இப்போது நினைவிருந்தால்
கதாசிரியர் ஆகியிருப்பேன்
பாட்டி கதையை
காப்பி அடித்து................

அட போங்கப்பா....





ச்சீ இந்த

பழம் புளிக்கும்.....
நரிக்கதை ஞாபகம் வரும்போதெல்லாம்
எனது பிளாகர்
மட்டுமே ஞாபகம் வருகிறது....
ராப்பகலா கண்விழித்தும்
ஒரு கமெண்டும்
இல்லையே என்று.......................


புதன், 17 ஏப்ரல், 2013

வரும் ஆனா / varum aana





தினம் தினம்
அரசியல்வாதிகளின்
ஆயிரம் அறிக்கைகள்
மழைக்காக காத்திருக்கும்
வறண்ட நிலங்களை போல
நமது எதிர்பார்ப்புகள்...
வரும் ஆனா........................................

தாயின் பாசம் / LOVE MOTHER




கொஞ்சி கொஞ்சி
ஊட்டி வளர்த்த
தாய்.....................
தவிப்புடன் இருக்கிறாள்
அனாதை இல்லத்தில்.....
தன்னை பிரிந்த மகன்
அனாதையாக அலைகிறானே
என்று................