தேடு

திங்கள், 15 ஏப்ரல், 2013

ஒரு வரி தகவல் துளிகள் / oru vari thagaval thuligal


  •  2012ம் ஆண்டுக்குள் 17 பில்லியன் சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஒரு மாதத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான இணையதளப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் இயங்குகிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும்.
  • அமெரிக்காவில் திருமணமான 8 ஜோடிகளில் ஒரு ஜோடி, இணையம் வழியாக சந்தித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பர்.
  • சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கம்ப்யூட்டரில் இயங்கும்போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சோதித்துப் பாருங்களேன்.
  • இணையதளத்தில் பேனர் விளம்பரம் முதன்முறையாக 1994ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • கம்ப்யூட்டரின் முதல் மவுஸ், மரத்தால் செய்யப்பட்டது. இதை 1964ம் ஆண்டு டாவ்க் ஏங்கல்பார்ட் என்பவர் வடிவமைத்தார்.

ஒரு வரி தகவல் துளிகள் / oru vari thagaval thuligal



  • மிக நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. 


  • யானையின் தும்பிக்கையில் எலும்பு இல்லை.

  • ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

  • ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போகாது.

  • மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

  • கங்காரு இருந்த இடத்திலிருந்து தாண்டும் தூரம் 7 மீட்டர்.

பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்


கலிலியோ...இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15ம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுவாரஸியமான தகவல்கள் இதோ...

பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான், பின்னாளில் வந்த இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது.
 
இத்தாலியிலுள்ள பைசா நகர பல்கலைக் கழகத்தில் கலிலியோவுக்கு கணித பேராசிரியராக வேலை கிடைத்தது. ஆனால் தனது ஆராய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவர பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கி விட்டனர்.

கண்ணாடி பிம்பம் -மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம், பாக்கெட்டில் வைக்கும் சீப்பு, ரீஃபில் பேனா போன்ற கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின் ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.

தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வாட்டிக்கான் சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ, 1633ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தவிடப்பட்டார். 1638ம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.

கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வரி தகவல் துளிகள் / oru vari thagaval thuligal



  • ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவகை மண்புழு, 10 அடி நீளம் வரை வளரும்.

  • மரங்கொத்திப் பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தும்.

  • அனைத்தும் போலார் கரடிகளும் இடது கை பழக்கம் கொண்டவை.

  • நன்கு வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு, 17 அங்குல நீளம் இருக்கும்.

  • மின்னல் தாக்கிய விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது

  • யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை. ஆனால் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. இதனால் தான், மிகப் பெரிய பொருட்களைக் கூட யானையால் தூக்கி எறிய முடிகிறது.