தேடு

திங்கள், 14 நவம்பர், 2016

1956-ல் 36000 அடி உயரத்தில் நிகழ்ந்த மர்மம், என்ன அது..?!

தடைநீக்கம் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பெரிய எண்ணிக்கையிலான யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு சார்ந்த புகைப்படங்கள் ஏராளம். அந்நிய விமானங்களை உலகம் முழுதும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருவதால் அண்டத்தில் வேற்று கிரக நாகரீகங்கள் உண்டு அவர்கள் பிற கிரகங்களுக்கு வருகை தருவதுண்டு என்பது தெளிவாகிறது.
அவைகள் ஒருபக்கம் இருக்க அரசாங்க அதிகாரிகளான விண்வெளி வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் கூட தானாக முன்வந்து அன்னிய வாழ்க்கை குறித்துப் பேசுவதும், அறிவார்ந்த அன்னிய இனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளன என்று நம்பிக்கை அளிப்பதும் அவ்வப்போது நடப்பதுண்டு.
அப்படியான ஒரு நம்பிக்கையான நிகழ்வு தான் 1956-ஆம் ஆண்டு சுமார் 36,000 ஆதி உயரத்தில் நிகழ்ந்துள்ளது..! புகைப்பட பதிவு :

புகைப்பட பதிவு :

ஏகப்பட்ட தவறான அல்லது விரிவான, போலியான கட்டுக்கதைகள் என்று யுஎஃப்ஒ வழக்குகள் வெளியாகினாலும் கூட சில யுஎஃப்ஒ (குறிப்பிடத்தக்க சதவீதம்) அனைத்து விளக்கத்தை பெற மறுக்கின்றன, எடுத்துக்காட்டுக்கு கனடா நாட்டு விமானிகளின் அந்நிய விமான புகைப்பட பதிவு..!
ஏலியன் கிராஃப்ட் :

ஏலியன் கிராஃப்ட் :

1956-ம் ஆண்டு இரண்டு கனடிய விமானப்படை விமானிகள் 36,000 அடி ( பயன்பாட்டில் சுமார் 11 ​​கி.மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு 'ஏலியன் கிராஃப்ட்'தனை கண்டுள்ளனர் உடன் அதன் மிக அசாதாரணமான படங்களையும் பதிவு செய்துள்ளனர்
4 கி.மீ.தொலைவில் :

4 கி.மீ.தொலைவில் :

அந்த மர்ம பொருளானது விமானத்தில் இருந்து சுமார் 4 கி.மீ.தொலைவில் இருந்துள்ளது மேலும் அது 45-க்கும் மேற்பட்ட நொடிகள் நிலைத்து நின்றுள்ளது.
வட்டு வடிவிலான பிரகாசமான ஒளி :

வட்டு வடிவிலான பிரகாசமான ஒளி :

விமானிகள் படி, அந்த மர்மமான விமானம் ஆனது நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் வட்ட வடிவிலான இது ஒரு பிரகாசமான ஒளி, ஒரு பளபளப்பான வெள்ளி டாலர் போன்று இருந்துள்ளது.
தெளிவான விளக்கம் :

தெளிவான விளக்கம் :

விமானத்தில் இருந்து கீழ் தொலைவாகவும், மேகங்களுக்கு மேலும் மிதந்துள்ள அந்த மர்ம பொருள் ஆனது சூரிய ஒளியை விட கணிசமான வெளிச்சமாக பிராகாசித்தது என்றும் விமான ஓட்டிகள் தெரிவித்திருந்தனர்.
ஆதரவு :

ஆதரவு :

இந்த நிகழ்வு மற்றும் புகைப்படம் சார்ந்த தெளிவான விளக்கம் கிடைக்கப் பெறவில்லை, இருப்பினும் மேற்கண்ட அனைத்து தகவல்களுக்கும் முன்னாள் கனடிய பாதுகாப்பு மந்திரியான பால் ஹெல்யர் ஆதரவு அளித்துள்ளார்.

வீடியோ :

முன்னாள் கனடிய பாதுகாப்பு மந்திரியான பால் ஹெல்யர் ஆதரவு அளித்து பேசிய வீடியோ பதிவு..!
மர்மமான வான்வெளி விந்தை :

மர்மமான வான்வெளி விந்தை :

மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும், 21-ஆம் நூற்றாண்டின் மிகவும் மர்மமான வான்வெளி விந்தை ஆய்வுகளின் (most mysterious aerial phenomenon of the 21st century) கீழ் தொகுக்கப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :

கருத்துகள் இல்லை: