தேடு

திங்கள், 14 நவம்பர், 2016

இண்டர்நெட் இல்லாமல் போட்டோ அனிமேஷன் உருவாக்குவது எப்படி.?

கூகுள் போட்டோஸ் ஆப் அடிக்கடி, கிட்டத்தட்ட ஒவ்வொரு பயனர்களுக்கும் சுவாரஸ்யமான மேம்படுத்தல்களை வழங்கி கொண்டே உள்ளது. அதிக மடங்கு பயனர்களை கொள்வது, பயனர்களை நடைமுறையில் மகிழ்ச்சியாக வைத்திருத்தல் மற்றும் ஒரு பயனர் நட்பு இடைமுகம் உருவாக்குதல் ஆகிவைகள் தான் கூகுள் போட்டோஸ் ஆப்பின் நோக்கமாகும்.
சமீபத்திய கூகுள் போட்டோஸ் மேம்படுத்தல் ஆனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புகைப்படங்களை ஏற்பாடு செய்ய, திருத்த மற்றும் பகிர்ந்து மற்றும் ஒரு சுவாரஸ்யமான அனிமேஷன் உருவாக்கவும் அனுமதிக்கிறது.  திறன்

திறன்

இந்த புதிய மேம்படுத்தல் ஆனது பயனர்கள் தங்கள் மொபைல் தொகுப்பு புகைப்படங்களில் இருந்து இணைய இணைப்பில் இல்லாத போதும் கூட, போட்டோ அனிமேஷனை உருவாக்கும் திறனை வழங்கும்.
எளிய வழிமுறை

எளிய வழிமுறை

இந்த புதிய மேம்படுத்தலை அனுபவிக்க, பயனர் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மேம்படுத்தப்பட்ட கூகுள் போட்டோஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் வெறுமனே இணைய இணைப்பு இல்லாமல் ஒரு புகைப்பட அனிமேஷன் உருவாக்க கீழ்வரும் 4 எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.
வழிமுறை #01

வழிமுறை #01

முன்னரே கூறியபடி ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று தங்களது ஸ்மார்ட் சாதனத்தில் கூகுள் போட்டோஸ் ஆப்தனை சமீபத்திய பதிப்பால் புதுப்பிக்க வேண்டும்
வழிமுறை #02

வழிமுறை #02

அப்டேட் மற்றும் இன்ஸ்டால் செய்த பின்னர் பயனர் தங்களது ஆண்ட்ராய்டு தொலைபேசியின் இண்டர்நெட்டை ஆப் செய்துவிட்டு கூகுள் போட்டோஸ் ஆப்தனை திறக்கவும்.
வழிமுறை #03

வழிமுறை #03

கூகுள் போட்டோஸ் பயன்பாட்டை திறந்த பின்னர், பயனர் திரையின் மேல் வலது மூலையில் கிளிக் செய்ய ஒரு பட்டியல் தோன்றும், பட்டியலில் இருந்து "கிரியேட் நியூ அனிமேஷன்" என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை #04

வழிமுறை #04

புதிய அனிமேஷன் உருவாக்க என்ற விருப்பத்தை கிளிக் செய்த பின்னர், பயனர் படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்கப்படும். உங்கள் தொலைபேசி கேலரியில் இருந்து 50 புகைப்படங்களை தேர்வு செய்ய முடியும். பின்னர் தேவைக்கேற்ப அனிமேஷன்களை நிகழ்த்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க

கருத்துகள் இல்லை: