தேடு

வியாழன், 18 ஏப்ரல், 2013

IPL கிரிக்கெட்



ஏம்பா நமக்கு
தெரிஞ்ச
கபடி,ஹாக்கியெல்லாம்
இப்படி காட்டுனா
கலக்குவோம்ல...
கண் கலங்கி
கைதட்டி பார்க்கும்
கண்கள்.......................
"IPL கிரிக்கெட் "
ம்ம் I FEEL UP.......................

பீர் கடன்/BEER

 விழித்தவுடன் விழிப்புடன் 
வெளியே செல்கிறேன் 
நேற்று பீருக்காக 
நண்பனிடம் வாங்கிய 
நூறு ரூபாய் கடன்.................. 

கூவம்


கூவம் ஆற்றை
கடக்கும்போது
முகம் கூசி
கடக்கிறோம்...

'AC'யிலே வசித்தாலும்
'IC'யிலே வைத்து
வதைக்கும் நோய்கள்....

கூவ வாசிகளோ
கூவி கேட்கிறார்கள்
ஏம்பா டெங்குனா
என்னப்பா ??????????????????????


ஆட்டோகிராப்


ஆட்டோகிராப்

ஆண்டவனிடம் 

ஆட்டோகிராப் வாங்க வேண்டும்!

எனது தலையெழுத்து

எப்படி என்று

அவன் கையெழுத்தில்

பார்த்துவிட... 

பேஷன்


பேஷன்

இப்போது எங்கும்

ஏழை, பணக்காரன்

வித்தியாசம் தெரிவதில்லை

கிழிந்த உடைகள்

பேஷனாகி போனதால்....! 

கருப்பு கண்ணிர்!


கருப்பு கண்ணிர்!

யாருக்கும் எந்த 
 கருப்பு கண்ணிர்!
தீங்கும் செய்யவில்லை

பிறகு ஏன்

என்னை மட்டும் 

துக்கத்தின் அடையாளம்

ஆக்கினீர்கள்.......! 

ஹைக்கூ..!


ஹைக்கூ..!

ஐஸ் கிரீமாக நீ...

கரைவது ஏனோ 

நான்தான் !

ஹைக்கூ...


ஹைக்கூ...

"கருப்பு நிலா

வெண்ணிற மேகங்கள் 

அவள் கண்கள்"

மனதின் முடிவில்லா தேடல்/ galaxy




தோ எனது
தேடலில் இந்த
புவியும் சிறு
பந்தாக....................

பிரபஞ்சத்தை தாண்டிய
மற்றொரு பிரபஞ்சத்தை
அடைந்து
எனது தேடலின்
தொடக்கம் இருக்க
தேடுகிறேன் ஏதோ
ஒன்றை.........................

பாட்டி கதை

கதை கதையாய்
ஆயிரம் கதைகள்
பாதி கதையிலேயே
தூங்கும் எனது
குழந்தை வயது..............
இப்போது நினைவிருந்தால்
கதாசிரியர் ஆகியிருப்பேன்
பாட்டி கதையை
காப்பி அடித்து................

அட போங்கப்பா....





ச்சீ இந்த

பழம் புளிக்கும்.....
நரிக்கதை ஞாபகம் வரும்போதெல்லாம்
எனது பிளாகர்
மட்டுமே ஞாபகம் வருகிறது....
ராப்பகலா கண்விழித்தும்
ஒரு கமெண்டும்
இல்லையே என்று.......................


புதன், 17 ஏப்ரல், 2013

வரும் ஆனா / varum aana





தினம் தினம்
அரசியல்வாதிகளின்
ஆயிரம் அறிக்கைகள்
மழைக்காக காத்திருக்கும்
வறண்ட நிலங்களை போல
நமது எதிர்பார்ப்புகள்...
வரும் ஆனா........................................

தாயின் பாசம் / LOVE MOTHER




கொஞ்சி கொஞ்சி
ஊட்டி வளர்த்த
தாய்.....................
தவிப்புடன் இருக்கிறாள்
அனாதை இல்லத்தில்.....
தன்னை பிரிந்த மகன்
அனாதையாக அலைகிறானே
என்று................

நாகரீக உணவு / fashion food



என்னதான் இருந்தாலும்
பாட்டி ஊட்டிய
கம்பு சோறும்
சோள சோறும்
காலம் மாற மாற
கரைந்து போன
சத்துணுவுகள்.....
நாகரீகமாக நாங்கள்
உண்ண இருக்கிறது
பீட்சாவும்,பர்க்கரும்
காரத்தில் கண்ணீர் வந்தாலும்
புளிப்பால் புன்னகை இழைந்தாலும்
சொல்கிறது எனது உதடுகள்
வாவ் செம TASTE யா.........................

சுததிந்திர பேனா / my freedom pen






னது பேனாவிற்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது........
கவிதை என்ற
நினைப்போடு கிறுக்க
தொடங்குவதற்குள்
மை மறைந்துவிட்டது........................

எனது இதயத்தின்.../enathu ithayathin



எனது இதயத்தின் 
அருகே ஏதோ 
ஒன்று குறைகிறதே 
அடடா.....................
மறந்துவிட்ட எனது 
கைப்பேசி.......................................

காதல் கண்கள் /kathal kangal


கண்ணடித்து சிரித்துவிட்டு
சென்றுவிட்டாய் நீ.............
பாவமடி என்கண்கள்
கண் சிமிட்டாமல்
பார்க்குதடி..........

இனிக்கும் வேம்பு /inikkum vempu


காதல் கசக்கும்
என்கின்றனர் சிலர்
ஆனால் விளையாட்டாக
அவள் எறிந்த
வேப்பங்காய்
இனிக்கிறதே................

என்னவள்.../YENNAVAL


பரீட்சை பேப்பரில்
அவளின் பெயரையே
ஆயிரம் முறைக்குமேல்
எழுதிவிட்டேன்.................
என் அருகில்
அவள்...................


திங்கள், 15 ஏப்ரல், 2013

ஒரு வரி தகவல் துளிகள் / oru vari thagaval thuligal


  •  2012ம் ஆண்டுக்குள் 17 பில்லியன் சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஒரு மாதத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான இணையதளப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் இயங்குகிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும்.
  • அமெரிக்காவில் திருமணமான 8 ஜோடிகளில் ஒரு ஜோடி, இணையம் வழியாக சந்தித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பர்.
  • சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கம்ப்யூட்டரில் இயங்கும்போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சோதித்துப் பாருங்களேன்.
  • இணையதளத்தில் பேனர் விளம்பரம் முதன்முறையாக 1994ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • கம்ப்யூட்டரின் முதல் மவுஸ், மரத்தால் செய்யப்பட்டது. இதை 1964ம் ஆண்டு டாவ்க் ஏங்கல்பார்ட் என்பவர் வடிவமைத்தார்.