தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2013

சிரிப் 'பூ,




பாக்கி : 22 - ம் நம்பர் பஸ் எங்கே வரும்?
வேலு : ரோட்ல தான்!

நண்பர் 1 : என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?
நண்பர் 2 : நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..

ரமனன் : பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?
முராரி : மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை.

முட்டாள் 1 : என்னங்க... செருப்பு காலை கடிக்குது
முட்டாள் 2 : அப்ப மாலைல போட்டுக்கங்க

ரமனன் : தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
பாக்கி : இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.

ஒருவர் : சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?
அதிகாரி : டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே

ரானி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
வேனி : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே

வேனி : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?
ரானி : எதுக்கு?
வேனி : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு

கருத்துகள் இல்லை: