தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2013

சிரிப் 'பூ


ரமனன் : சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?
சர்வர் : ஏன் அக்கறையா கேட்கறீங்க ?
ரமனன் : எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.
பாபு : டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?
டாக்டர் : அப்போ...., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?
அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?
புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!
நீதிபதி : "ஏம்ப்பா ரெண்டு காலும் நொண்டியா இருக்கும்போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கயே இன்னும் கை காலல்லாம் நல்லா இருந்தா என்ன செஞ்சிருப்ப?"
திருடன் : "இப்டி அனாவசியமா மாட்டிட்டுருக்க மாட்டேங்க."
வக்கீல் : மை லார்ட் . . . என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர் நேர்மையானவர் யாரிடமும் கொடூரமாக நடந்து கொள்வதை அவர் வெறுப்பவர் எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில் என் கட்சிக்காரர் சிறந்தவர்.
கட்சிக்காரர் : (சத்தமாக) யோவ் வக்கீல் . . . என்ன விளையாடறியா? காசு வாங்கிக்கிட்டு என்னைப் பத்தி சொல்லுய்யான்னா . . . வேற யாரைப் பத்தியோ சொல்லிக்கிட்டு இருக்கியே . . . தொலைச்சிடுவேன் தொலைச்சி . . .
கோபு : டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.
பாபு : அப்புறம் ?
கோபு : அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்
நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.
ஒருவர் : உங்களுடன் சீட்டுக்குச் சேரும் பொடியன் அவ்வளவு நல்லவன் இல்லை. இடையிலே முறிச்சுக்கொண்டு ஊர் மாறி, காலை வாரி விடப் போறான் கவனம்.
மற்றவர் : நானே முதல் சீட்டை சேர்த்துக் கொண்டு நாடு மாறுவதற்கு எல்லா ஆயத்தங்களும் செய்து விட்டேன். நீங்கள் வேறு அது இது என்று சொல்லிக் கொண்டு…ஒருவர் ? ? ?

கருத்துகள் இல்லை: