தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2013

சிரிப் 'பூ



முட்டாள் 1 : சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...
முட்டாள் 2 : அதுக்கென்ன இப்போ..
முட்டாள் 1 : ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.
வக்கீல் : கொலை எங்கே நடந்தது?
சாட்சி : திருப்பதியிலே சார்.
வக்கீல் : இப்படி மொட்டையா சொன்னா எப்படி?
கோபு : அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..
பாபு : ஏன்...
கோபு : அதான் சீப்பா கிடைக்குதாம்
பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?
ரமேஷ் : எத்தனை பெரிய ஆபத்து வந்தாலும் யானை, குதிரை எல்லாம் கத்தாது.
சுரேஷ் : ஏன்?
ரமேஷ் : யானை பிளிறும்! குதிரை கனைக்குமே!
ஒருவர் : திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே என்ன ஆச்சி ?
மற்றொருவர் : கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க
ரமனன் : பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா..?
பாப்பா : இல்ல, எனக்கு எடுத்தது..என்ன..,
பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: