தேடு

வியாழன், 11 ஏப்ரல், 2013

இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி அசத்தும் அமெரிக்க சிறுவன்


இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி அசத்தும் அமெரிக்க சிறுவன்
அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது சிறுவன், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறான். நியூயார்க்கைச் சேர்ந்த திமோதி டோனருக்கு, சிறுவயது முதலே பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் இருந்தது. 


இதற்காக அவர் பெரிய பயிற்சி நிறுவனங்கள் எதையும் நாடவில்லை. மாறாக, அன்றாடம் தான் தொடர்பு கொள்ளும் நபர்கள் மூலமாகவே தனது மொழிப்பயிற்சியை வளர்த்திருக்கிறார். உள்ளூர் டாக்சி டிரைவர்களுடன் அடிக்கடி பேசுவது, ஓட்டல்களில் சந்திக்கும் நபர்களுடன் தொடர்ந்து பேசிப் பழகுதல் மற்றும் இ-மெயில் மூலம் உலகம் முழுவதிலும் உள்ளவர்களுடன் பழகி, அவர்களின் மொழியைப் பற்றி அறிந்துள்ளார். 

இவ்வாறு இந்தி, அரபு, குரோஷியன், டச்சு, ஆங்கிலம், பார்சி, பிரெஞ்சு, ஜெர்மன், ஹவுசா, ஹீப்ரு, இந்தோனேசியன், இஷிஹோசா, (தென் ஆப்பிரிக்க ஆட்சி மொழி), இத்தாலி, மாண்டரியன், ஒஜிப்வே (அமெரிக்க உள்ளூர் மொழி), பெர்சியன், பாஷ்டோ, ரஷ்யன், ஸ்பானிஷ், ஸ்வாஹிலி, துருக்கிஷ், வோலோப், யித்திஷ் என 23 மொழிகளையும் கற்றுத் தேர்ந்துள்ளான். 

அதன்பின்னர் டோனர் தனது மொழித் திறமையை வீடியோ பதிவுகளாக யுடியூப் மூலம் வெளியிட ஆரம்பித்ததால், அவரது பன்மொழித் திறமை உலகிற்கு தெரியவந்தது. இதனைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள், டோனரின் திறமையை பாராட்டி, ஊக்கம் அளித்துள்ளனர். அவற்றில் ஒரு வீடியோவில் 20 மொழிகளில் தொடர்ந்து பேசியதன் மூலம் டோனர் மிகவும் பிரபலம் ஆகியுள்ளான்.

இடி / idi


மின்னல் பாயும்போது ஏற்படும் வெப்பமானது காற்றை கிழித்து கொண்டு

வருவதால் இடி உண்டாகிறது.


மின்னல் / minnal

                                                                                                                                                                                     மின்னல் என்பது ஏறக்குறைய 250 வோல்ட்ஸ் மின்சார சக்தி கொண்டது எனலாம்.
மின்னல் மின்சார சக்தி மட்டுமன்று 

அதிலிருந்து வரும் நைட்ரஜன் 

உரசத்து செடி,கொடிகள் 

வளருவதற்கு பயன்படுகிறது.

வானவில் /VAANAVIL




மழைத்துளிகளின் மீது சூரிய ஒளி

விழுவதால், அதன் பிரதிபலிப்பில் வானவில் 

தோன்றுகிறது. சூரியனின் ஒளிக்கதிர் 

மழைத்துளியில் புகும்போது அது பல 

நிறங்களாக பிரிக்கபடுகிறது. வான வில்லில் 

ஏழு நிறங்கள் உள்ளது  நமக்கு தெரிந்ததே. விப்கியார் என்று அதனை 

வரிசைபடுதியுள்ளனர்.

manithanin yedai/ மனிதனின் எடை

 மனிதனின் எடை  மற்ற கோள்களில் ஒப்பிடும்போது  வேறுபடுவதை ஆய்ந்துள்ளனர். ஆனால் எவ்வளவு என்பதை நாம் அறிந்திலோம். உதாரணமாக 60 கிலோ பூமியில் இருக்கும் மனிதனின் எடை மற்ற கிரகங்களில் இருந்தால் எவ்வளவு எடை என்பதை மேலும் அறிவோம்.


சூரியனில்          1680 கிலோ

வெள்ளியில்     51.6 கிலோ

சந்திரனில்        0.987 கிலோ

புதனில்              21.6 கிலோ

செவ்வாயில்   22.8 கிலோ

வியாழனில்    159 கிலோ

சனியில்           68.4 கிலோ

யுரேனஸ்        57.6 கிலோ

நெப்டியூன்      60.0 கிலோ 

இந்தியா கேட்/ india gate

முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது இந்திய கேட். போரின் போது 9000 வீரர்கள் இறந்தனர். இந்திய கேட்டில் 13,516 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன. 1971 முதல் அவ்விடத்தில் 'அமர்ஜோதி' என்ற அணையா விளக்கு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இபில் கோபுரம்/eiffel tower


 அலெக்ஸாண்டர் குஸ்தாவ் இபில் என்பவரால் 1889-ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சியின் நினைவாக உருவாக்கப்பட்ட இபில் கோபுரமாகும். பாரிஸ் நகரில் அமைந்துள்ள இந்த கோபுரத்தின் உயரம் 984 அடியாகும்.இதற்காக பயன்படுத்திய இரும்புத் துண்டுகள் 15,000 ஆகும்.இதன் அடித்தளம் மட்டும் 330  சதுர அடியாகும். 

Miga periya rail nilayam/மிக பெரிய ரயில் நிலையம்








நியூயார்க் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் என்பதே பெரிய ரயில் நிலையமாகும். மொத்தம் 48 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 550 ரயில்கள் வந்து செல்கின்றன.

திங்கள், 1 ஏப்ரல், 2013

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்). 

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், "ஐ.சி.எஸ்" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்" என்று வீர உரை நிகழ்த்தினார். 

அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை "நேதாஜி" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை. 1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். 

அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட "பார்வர்டு பிளாக்" என்ற அமைப்பை உருவாக்கினார். 

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. 

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 

1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. 

நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். 

வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். 

"சயாதீன்" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். 

ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். 

அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். 

இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார். காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. 

அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். 

அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். 

பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி சம்மதம்


லண்டன் சென்ற இந்தியத் தலைவர்களுடன், பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லி, இந்திய விவகார மந்திரி பெதிக் லாரன்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கும், முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்த உண்மையாகவே முயன்றனர். பேச்சுவார்த்தை பல நாட்கள் நீடித்தது. 

பேச்சு வார்த்தை நடைபெறும்போதே, லண்டனில் பல கூட்டங்களில் ஜின்னா பேசினார். "பாகிஸ்தான் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு ஏற்காவிட்டால், இந்தியாவில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். பேச்சுவார்த்தை முடிவில், பிரதமர் ஆட்லி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் பிரகடனம் வருமாறு:- பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி சம்மதம்

"இந்தியாவின் இருபெரும் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையே ஒற்றுமை ஏற்படுத்த நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால், இந்தியாவில் அபாயகரமான சூழ்நிலை உருவாகியிருப்பதை பிரிட்டிஷ் அரசு உணருகிறது. 1948 ஜுன் மாதத்துக்கு முன், இந்தியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து விடுவது என்று, எனது அரசு முடிவு செய்திருக்கிறது. 

அதிகாரத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை அது சாத்தியமற்றதாகி விட்டால், இப்போதுள்ள மாகாண அரசுகளிடமே அதிகாரத்தை ஒப்படைத்து விடலாமா, அல்லது வேறு ஏதேனும் நல்ல வழி உள்ளதா என்று பிரிட்டிஷ் அரசு ஆலோசிக்கும். 

இதற்கிடையே, இந்தியாவில் இப்போது வைஸ்ராயாக பதவி வகிக்கும் வேவல், இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்படுகிறார். அவருக்குப்பதிலாக, புதிய வைஸ்ராயாக லார்டு மவுண்ட்பேட்டன் நியமிக்கப்படுகிறார். 1947 மார்ச் மாதம் அவர் பதவி ஏற்பார். அவருடைய முக்கிய வேலை, ஆட்சிப் பொறுப்பை இந்தியர்களிடம் நல்ல முறையில் ஒப்படைத்துவிட்டு திரும்புவதுதான்."

இவ்வாறு ஆட்லி அறிவித்தார். 

இதற்கிடையே இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில், ஆட்லி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது சர்ச்சில் பேசுகையில், "இந்தியர்கள் அற்பபதர்கள். அவர்களுக்குப் பயந்து இந்தியாவில் இருந்து வெளியேறுவது இழுக்கு" என்று கூறினார். 

சைமன் கமிஷன் தலைவராக இந்தியாவுக்கு வந்து அவமானப்பட்ட சைமனும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். ஒரு கட்டத்தில், இந்தத் தீர்மானம் நிறைவேறிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், முன்பு இந்தியாவில் வைஸ்ராயாக இருந்து, காந்தியடிகளுடன் உடன்பாடு கண்ட நல்லவரான இர்வின் பிரபு, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உணர்ச்சிகரமாகவும், ஆணித்தரமாகவும் பேசினார். 

அவருடைய பேச்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இந்தியா மீது அனுதாபம் ஏற்படச் செய்தது. முடிவில் ஓட்டெடுப்பு நடந்தது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 185 பேரும், எதிராக 337 பேரும் ஓட்டளித்தனர். தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்திய சுதந்திரத்துக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம் மறைமுகமாக அங்கீகாரம் அளித்துவிட்டது. அதனால் இந்தியத் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மவுண்ட்பேட்டன் வருகை ஆட்லி அறிவித்தபடி, வைஸ்ராய் வேவல் 1947 மார்ச் 23-ந்தேதி இந்தியாவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு மறுநாள், புதிய வைஸ்ராயாக லார்டு மவுண்ட்பேட்டன் பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் இந்தியத் தலைவர்களை ஒவ்வொருவராகவும், கூட்டாகவும் அழைத்து இந்திய சுதந்திரம் பற்றி அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டார். 

காந்தியை அழைத்துப் பேசியபோது, "பிரிவினை தவிர நீங்கள் வேறு எதைச்சொன்னாலும் ஏற்கிறேன்" என்று காந்தி தெரிவித்தார். "அப்படியானால், இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண்பது? பிரிவினையைத் தவிர்க்க, தேசப் பிதாவான உங்கள் யோசனை என்ன?"என்று மவுண்ட்பேட்டன் கேட்டார். 

"ஜின்னாவை பிரதமராக்கி அவர் விரும்புகிறவர்களைக் கொண்ட மந்திரிசபை அமைக்கலாம்" என்று காந்தி தெரிவித்தார். இதுபற்றி இந்தியத் தலைவர்களின் கருத்தை மவுண்ட்பேட்டன் கேட்டார். காந்தியின் யோசனைக்கு நேருவும், பட்டேலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகக் காந்தி தன் யோசனையை வாபஸ் பெற்றுக்கொண்டார். 

பிரிவினை ஒன்றே வழி எல்லாத் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியபிறகு. "இந்தியா சுதந்திரம் அடைவதற்கு, பிரிவினை ஒன்றுதான் வழி" என்ற முடிவுக்கு வந்தார் மவுண்ட்பேட்டன். இதனைத்தொடர்ந்து வல்லபாய் படேலை அழைத்துப் பேசினார். "ஒற்றுமை இல்லாத - பலமற்ற பெரிய இந்தியாவைவிட, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் அமையும் சுதந்திர இந்தியா வலுவானதாக இருக்கும்" என்று கூறினார். 

அவருடைய கருத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த படேல், பிரிவினைக்குச் சம்மதித்தார். அடுத்து நேருவின் நண்பரும், சிறந்த ராஜதந்திரியுமான கிருஷ்ணமேனனை அழைத்துப்பேசினார். "இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்களை சம்மதிக்கச் செய்வதுதான்" என்று ஆணித்தரமாக எடுத்துக்கூறி, கிருஷ்ணமேனனைச் சம்மதிக்கச் செய்தார். 

பிறகு கிருஷ்ணமேனன், நேருவைச் சந்தித்து, வைஸ்ராயுடன் தான் நடத்திய பேச்சுவிவரத்தைத் தெரிவித்தார். "இந்தியாவுக்கு உடனடியாக சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷார் தயாராகி விட்டார்கள். பாகிஸ்தான் கோரிக்கை மட்டும்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஜின்னாவும், நாமும் ஒன்றுபட்டு வாழ்வது நடக்காத காரியம். பிரிவினைக்குச் சம்மதித்து, இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்" என்று கிருஷ்ணமேனன் கூறினார். 

இதுபற்றி தீவிரமாக யோசித்த நேரு பிரிவினைக்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். பிரதமர் நேருவும், படேலும் பிரிவினைக்குச் சம்மதித்துவிட்ட பிறகு, காந்திஜியைச் சந்தித்தார், மவுண்ட்பேட்டன். தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றியும், பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சம்மதித்துவிட்டது பற்றியும் தெரிவித்தார். பிரிவினைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார், காந்தி. 

"என் பிணத்தின் மீதுதான் பிரிவினையை அமுலுக்கு கொண்டு வரமுடியும்" என்றார். அபுல்கலாம் ஆசாத்தும் பிரிவினையை எதிர்த்தார். பிரிவினை பற்றி தலைவர்களிடையே விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, வடநாட்டில் மீண்டும் கலவரம் வெடித்தது. பல நகரங்கள் தீப்பற்றி எரிந்தன. காந்திஜியை நேருவும் மற்ற தலைவர்களும் சந்தித்து, பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதிக்கும்படி வேண்டினார்கள். 

முடிவில், "இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்பதே என் லட்சியம். இந்தியா சுதந்திரம் பெறவும், வகுப்புக் கலவரங்களுக்கு முடிவு காணவும் பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதிக்கிறேன்" என்று காந்தி கூறினார். இதன்பின் நேரு, ஜின்னா, சீக்கிய தலைவர் பல்தேவ்சிங் ஆகிய மூவரும் ரேடியோவில் தனித்தனியே பேசினார்கள். 

"தேசப்பிரிவினை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது" என்று அவர்கள் அறிவித்தார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்கு ஏற்பாடு நடக்கிறது என்பதை அறிந்ததும், பஞ்சாபிலும், வங்காளத்திலும் தனி நாடு கோரிக்கை எழுந்தது. "பஞ்சாப் பஞ்சாபியருக்கே", "வங்காளம் வங்காளியருக்கே" என்று குரல் எழுப்பினார்கள். இந்நிலையில், வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் 18-5-1946-ல் லண்டனுக்குச் சென்றார். 

பிரதமர் ஆட்லியுடனும், இந்திய விவகார மந்திரி லாரன்சுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஓர் இறுதி முடிவுடன் 31-5-1946-ல் இந்தியா திரும்பினார். மவுண்ட்பேட்டன் தன் திட்டத்தை, இந்தியத் தலைவர்களிடம் தெரிவித்து அவர்களுடைய ஆதரவைக் கோரினார். அந்தத் திட்டம் வருமாறு:- 

(1) 1948 ஜுன் மாதத்துக்குள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று இங்கிலாந்துப் பிரதமர் ஆட்லி முன்பு அறிவித்தார். அது மாற்றப்பட்டு 1947 ஆகஸ்ட் 15-ந்தேதியே சுதந்திரம் தருவதென்று, பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

(2) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற சுதந்திர நாடு அமைக்கப்படும். பஞ்சாப்பைச் சார்ந்த பகுதிகள் மேற்கு பாகிஸ்தானாகவும், வங்காளத்தைச் சேர்ந்த பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானாகவும் அமையும். 

(3) இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்த அதிகாரங்கள், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மாற்றப்படும். 

- இதுவே, மவுண்ட்பேட்டன் அறிவித்த திட்டம். காந்தி ஒப்புதல் இந்தத் திட்டத்தைக் காந்தியிடம் கொண்டு போய்க்காட்டினார், மவுண்ட்பேட்டன். அப்போது காந்தி, மவுன விரதத்தில் இருந்தார். அதனால், தன்னுடைய ஒப்புதலையும் மகிழ்ச்சியையும் அவர் எழுதிக்காட்டினார். ஜுன் 10-ந்தேதி முஸ்லிம் லீக் பேரவை கூடி, மவுண்ட்பேட்டனின் திட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. 

காங்கிரஸ் கமிட்டி மவுண்ட் பேட்டனின் திட்டம் பற்றி ஆலோசிக்க, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஜுன் 14-ந்தேதி கூடியது. இந்தக் கூட்டத்தில் காந்திஜி உருக்கமாகப் பேசினார். "இந்தியா விடுதலை பெறவேண்டும் என்பதற்காகவே பிரிவினைக்குச் சம்மதிக்கிறேன்" என்று கூறினார். விவாதத்தின் முடிவில் ஓட்டெடுப்பு நடந்தது. பிரிவினைக்கு ஆதரவாக நேரு, பட்டேல், கோவிந்த வல்லப பந்த் உள்பட 157 பேரும், எதிர்த்து 29 பேரும் ஓட்டளித்தனர். 

32 பேர் நடுநிலைமை வகித்தனர். கவனர் ஜெனரல் பதவி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கொஞ்ச காலம் மவுண்ட்பேட்டனே கவர்னர் ஜெனரலாக இருப்பதற்கு காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் இசைவு தந்திருந்தன. பிறகு ஜின்னா தன் கருத்தை மாற்றிக்கொண்டு, "சுதந்திர பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக நானே பொறுப்பேற்கப் போகிறேன்" என்று அறிவித்தார். 

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் முன்பு ஒப்புக்கொண்டபடி, மவுண்ட்பேட்டனே சுதந்திர இந்தியக் கவர்னர் ஜெனரலாக இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தனர். அரசாங்க சொத்தைப் பிரிப்பது, ராணுவத்தைப் பிரிப்பது ஆகிய பணிகளைக் குறித்த நேரத்தில் மவுண்ட்பேட்டன் செய்து முடித்தார். 

பிரதமர் நேருவும், மற்ற மந்திரிகளும் அதற்குத் துணை புரிந்தனர். தேசியக்கொடி அசோகச் சக்கரம் பொறித்த மூவர்ணக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்க, இந்திய அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜனகணமன" என்ற பாடல், இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.